வாழ்நாளில் ரயிலையே பார்த்திராத 27 நாடுகள்., பட்டியல் இதோ
ரயில்வே பழமையான போக்குவரத்து சாதனமாக கருதப்படுகிறது. இது கிறிஸ்துவுக்கு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் தொடங்கியதாக கூறப்படுகிறது.
முன்பு இது சுரங்கங்களில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் நீராவி இயந்திரம் வந்த பிறகு, வணிக இரயில்வே தொடங்கியது. இதனால், மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வசதியாக இருந்தது.
இன்று, உலகின் பெரும்பாலான நாடுகளில் ரயில்வே நெட்வொர்க் பயன்படுத்தப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய இரயில் வலையமைப்பை அமெரிக்கா கொண்டுள்ளது, ஆனால் அதிவேக ரயில்களின் அடிப்படையில் சீனா முன்னேறியுள்ளது.
ரயில் நெட்வொர்க்கைப் பொறுத்தவரை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது இடத்திலும், ரஷ்யா மூன்றாவது இடத்திலும், இந்தியா நான்காவது இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் தினமும் சுமார் 11,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன மற்றும் கோடிக்கணக்கான மக்கள் அங்கு பயணிக்கின்றனர். ரயில்வே இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இன்றும் உலக வரைபடத்தில் இன்னும் ரயில்வே நெட்வொர்க் இல்லாத பல நாடுகள் உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்த நாடுகளில் இந்தியாவின் அண்டை நாடான பூட்டானும் அடங்கும். ஆனால், இப்போது இந்தியா அங்கு ரயில் பாதை அமைக்கிறது. 57 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை 2026-க்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் நெட்வொர்க் இல்லாத பெரும்பாலான நாடுகள் மிகச் சிறிய மற்றும் தீவு நாடுகளாகும். உதாரணமாக, Andorra உலகின் 11வது சிறிய நாடு.
அதேபோன்று, உலக வரைபடத்தில் தோன்றிய புதிய நாடான East Timor-க்கும் ரயில்வே நெட்வொர்க் இல்லை. இருப்பினும், இப்போது அங்கு ரயில் வலையமைப்பை உருவாக்குவது குறித்து பேசப்படுகிறது.
மேற்கு ஆபிரிக்க நாடான Guinea-Bissau-வுக்கும் ரயில் நெட்வொர்க் இல்லை. வளைகுடா நாடான Kuwait-யிலும் ரயில் நெட்வொர்க் இல்லாமல் உள்ளது. ஆனால் தற்போது அங்கு பல ரயில்வே திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
Malta மற்றும் Cyprus போன்ற நாடுகள் நஷ்டம் காரணமாக ரயில் நெட்வொர்க்குகளை மூடிவிட்டன
இந்த நாடுகளில் ரயில் நெட்வொர்க் இல்லை
அன்டோரா, பூட்டான், சைப்ரஸ், கிழக்கு திமோர், கினியா-பிசாவ், ஐஸ்லாந்து, குவைத், லிபியா, மக்காவ், மால்டா, மார்ஷல் தீவுகள், மொரிஷியஸ், மைக்ரோனேஷியா, நைஜர், ஓமன், பப்புவா நியூ கினியா, கத்தார், ருவாண்டா சான் மரினோ, சாலமன் தீவுகள், சோமாலியா, சுரினாம், டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, துவாலு, வனுவாட்டு மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் ரயில் நெட்வொர்க் இல்லாத நாடுகளில் அடங்கும். இந்த நாடுகளில் பெரும்பாலானவை சிறிய தீவு நாடுகள்.
கத்தார், குவைத் மற்றும் ஓமன் ஆகியவை உலகின் பணக்கார நாடுகளில் உள்ளன. அங்கு பளபளக்கும் சாலைகள் இருப்பதால் ரயில் பாதையின் தேவையை அவர்கள் உணரவில்லை. இருப்பினும், 2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக் கோப்பையை மனதில் கொண்டு கத்தாரில் மெட்ரோ நெட்வொர்க் கட்டப்பட்டுள்ளது.
மிகப்பாரிய ரயில் நெட்வொர்க்
உலகின் மிகப்பாரிய ரயில் நெட்வொர்க் அமெரிக்காவில் உள்ளது. இந்த நாட்டில் 148,553 கிமீ ரயில் பாதைகள் உள்ளன. சீனாவில் ரயில் நெட்வொர்க் 109,767 கி.மீ. இதற்குப் பிறகு ரஷ்யா. இந்த நாட்டில் உள்ள ரயில் பாதைகளின் நீளம் 68,103 கி.மீ.
கனடாவில் இது 48,150 கி.மீ. இதைத் தொடர்ந்து ஜேர்மனி, பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வருகின்றன. நவீன இரயில்வேயின் தாய் பிரிட்டனில் 16,179 கிமீ ரயில் பாதைகள் உள்ளன.
பாகிஸ்தானில் உள்ள ரயில் பாதைகளின் நீளம் 7,791 கி.மீ. வெனிசுலாவில் இரயில் வலையமைப்பு 336 கிமீ ஆகும், அதே சமயம் UAE 279 பாதை கிமீ, லக்சம்பர்க் 271 கிமீ மற்றும் ஹாங்காங்கில் 230 கிமீ உள்ளது.