மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை பட்டியல் இதோ..!

2024 மார்ச் மாதத்தில் வங்கிகளுக்கான விடுமுறை தினங்கள் குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. அட்டவணையின் படி இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் பொது விடுமுறைகள் மற்றும் பிராந்திய விடுமுறைகளுடன் சேர்த்து மொத்தம் 14 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசுகளின் முடிவின் கீழ் எடுக்கப்படும். விடுமுறை தினங்களின் பட்டியலை கவனித்து பொதுமக்கள் அதற்கேற்றவாறு தங்களின் வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தேதி & நாள் விடுமுறை நிலை:
மார்ச் 1, வெள்ளி சாப்சார் குட் மிசோரம்
மார்ச் 3, ஞாயிறு வார இறுதி வங்கி விடுமுறை இந்தியா முழுவதும்
மார்ச் 8, வெள்ளி மஹாசிவராத்திரி (Maha vad-13)/சிவராத்திரி பல மாநிலங்கள்
மார்ச் 9, சனிக்கிழமை மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை இந்தியா முழுவதும்
மார்ச் 10, ஞாயிறு வார இறுதி வங்கி விடுமுறை இந்தியா முழுவதும்
மார்ச் 17, ஞாயிறு வார விடுமுறை இந்தியா முழுவதும்
மார்ச் 22, வெள்ளி பீகார் திவாஸ் பீகார்
மார்ச் 23, சனிக்கிழமை மாதத்தின் நான்காவது சனிக்கிழமை இந்தியா முழுவதும்
மார்ச் 24, ஞாயிறு வார இறுதி வங்கி விடுமுறை இந்தியா முழுவதும்
மார்ச் 25, திங்கள் ஹோலி (இரண்டாம் நாள்) – துலேட்டி/டோல் ஜாத்ரா/துலாண்டி பல மாநிலங்கள்
மார்ச் 26, செவ்வாய் யாசாங் 2வது நாள்/ஹோலி ஒடிசா, மணிப்பூர் மற்றும் பீகார்
மார்ச் 27, புதன் ஹோலி பீகார்
மார்ச் 29, வெள்ளி புனித வெள்ளி பல மாநிலங்கள்
மார்ச் 31, ஞாயிறு வார இறுதி வங்கி விடுமுறை இந்தியா முழுவதும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *