ரூ.30 லட்சத்திற்குள் கிடக்கும் ஹை-டெக் SUV கார்கள்… பட்டியல் இதோ!
நாட்டில் ஆட்டோமொபைல் துறை ஒரு பெரிய வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. புதிய ஆண்டு பிறந்துள்ள நிலையில் அடுத்தடுத்து பல்வேறு புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டில் அதாவது 2023-ல் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஹேட்ச்பேக்ஸ் முதல் செடான்கள் வரை, மிட்-சைஸ் முதல் கிங்-சைஸ் எஸ்யூவி-க்கள் வரை பல சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினர்.
நீங்கள் விரைவில் புதிதாக கார் வாங்க திட்டமிட்டு இருக்கிறீர்களா? அப்படி என்றால் ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான பட்ஜெட்டின் கீழ் கிடைக்கும் சில சிறந்த கார்களை இங்கே நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். இது உங்களுக்கு உதவியாக இருக்க கூடும்.
எம்ஜி ஹெக்டர் பிளஸ் (MG Hector Plus): MG நிறுவனத்தின் புதிய ஹெக்டர் பிளஸ் எஸ்யூவி சில குறிப்பிடத்தக்க அப்டேட்ஸ்களுடன் கடந்த ஆண்டில் அதாவது 2023 ஜனவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கிங் சைஸ் எஸ்யூவியை ரூ.17.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் வாங்கலாம். இதன் டாப் வேரியன்ட்டின் விலை ரூ.22.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது. எம்ஜி ஹெக்டரின் மேம்படுத்தப்பட்ட மாடலாக அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஹெக்டர் பிளஸ் வருகிறது மற்றும் சில வலுவான அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் இருக்கும் முக்கிய அம்சங்களில் 7-இன்ச் ஃபுல்-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஆல் கார் கனெக்ட் டெக்னலாஜியுடன் கூடிய 14-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், காற்றோட்டமான ஃப்ரன்ட் சீட்ஸ் , பனோரமிக் சன்ரூஃப், 8-கலர் ambient லைட்டிங், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 360 டிகிரி கேமரா உள்ளிட்டவை அடங்கும்.
2023 டாடா ஹாரியர் (2023 Tata Harrier): கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டாடாவின் ஆல் நியூ ஹாரியர் காரின் பேஸ் மாடலின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.15.49-ஆக இருக்கிறது. புதுப்பொலிவூட்டப்பட்ட இதன் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.26.44 லட்சம் வரை செல்கிறது. ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனாக அறிமுகமான 2023 டாடா ஹாரியர் கார் அதன் இன்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் என இரண்டிலுமே சில முக்கிய அப்டேட்ஸ்களை பெற்றது.
ஹேரியர் காரின் முன்பக்கத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கண்ணைக் கவரும் க்ரில் அமைப்பு, ஸ்பிலிட் செய்யப்பட்ட ஹெட்லைட், க்ரிலுக்கு மேல் முழுமையாக எல்இடி விளக்குகள், அதோடு முன்பக்க பம்பர் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதன் இன்டீரியரை பொறுத்தவரை டாஷ்போர்டு பலவித மாற்றங்களை கண்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள அழகான எல்இடி விளக்குகள் நேர்த்தியாக இருக்கின்றன.
2023 டாடா சஃபாரி (2023 Tata Safari): டாடா ஹாரியருடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்ட லேட்டஸ்ட் 2023 சஃபாரி சந்தேகத்திற்கு இடமின்றி சிறந்த 6-7 சீட்டுகள் கொண்ட காரை தேடுவோருக்கு நல்ல தேர்வாக இருக்கும். இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ.16.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். கூடுதல் வசதி கொண்ட டாப் ஸ்பெக் மாடலின் விலை ரூ.25.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இந்த கார் 1956 சிசி டீசல் எஞ்சின் ஆப்ஷனுடன் வருகிறது.
இது 3750rpm -ல் 167.62bhp பவரையும், 1750-2500rpm -ல் 350Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. தற்போது இந்த காரில் புதிதாக டிரைவிங் மற்றும் டிராக்ஷ்ன் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிய டாடா சஃபாரியின் மைலேஜை பொறுத்தவரை மேனுவலாக இருந்தால் லிட்டருக்கு 16.30கி.மீ, அதுவே ஆட்டோமேட்டிக்காக இருந்தால் லிட்டருக்கு 14.50கிமீ மைலேஜை தருகிறது.