UPI பேமெண்ட் செய்யும்போது மோசடிகளில் சிக்காமல் இருக்க இதுதான் வழி… நீங்க ஃபாலோ பண்ண வேண்டிய டிப்ஸ்!
மோசடி செய்யும் நபர்கள் தற்போது யூபிஐ யூசர்களை குறி வைப்பது அதிகரித்து வருகிறது. ஆகவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
அதிகாரப்பூர்வ UPI அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்வது, பேமெண்ட் செய்வதற்கு முன்பு UPI IDகளை வெரிஃபை செய்வது, OTPகளை ஷேர் செய்யாமல் இருப்பது மற்றும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை கிளிக் செய்வதை தவிர்ப்பது போன்ற சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.
மேலும், சமீபத்திய மோசடிகள் மற்றும் மோசடி செய்வதற்கு அவர்கள் பின்பற்றும் யுத்திகள் பற்றி நாம் அவ்வப்போது தெரிந்து வைத்துக் கொள்வது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும்.
ஆன்லைன் ட்ரான்ஸாக்ஷன் முன்பை காட்டிலும் தற்போது பலரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது எளிதான அதே நேரத்தில் மிகவும் சௌகரியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆயினும் ஆன்லைன் பேமெண்ட் செய்யும் பொழுது மோசடியில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகளும் ஏராளமாக உள்ளது.
ஆகவே இந்த பதிவில் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வழங்கிய UPI பாதுகாப்பு கவச குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.
பணத்தை டெபிட் செய்வதற்கு மட்டும் UPI PIN பயன்படுத்தவும்:
உங்களது அக்கவுண்டில் இருந்து வேறொரு அக்கவுண்டருக்கு நீங்கள் பணம் அனுப்பும் போது மட்டும் UPI PIN என்டர் செய்தால் போதுமானது. பிறரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கு நீங்கள் UPI PIN என்டர் செய்ய தேவை இல்லை.
பெறுநரின் பெயரை வெரிஃபை செய்யவும்:
UPI ID உறுதி செய்யும் பொழுது எப்பொழுதும் பெறுநரின் பெயர் சரிதானா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்ளிகேஷனில் UPI PIN -ஐ தேவையான இடத்தில் மட்டும் என்டர் செய்யவும்:
உங்களது UPI PIN ஐ பேமெண்ட் அப்ளிகேஷனில் உள்ள UPI PIN பக்கத்தில் மட்டும் என்டர் செய்யுங்கள்.
பேமெண்ட் செய்வதற்கு மட்டும் QR கோடை ஸ்கேன் செய்யவும்:
QR கோடை பிரத்தியேகமாக பேமெண்ட்கள் செலுத்துவதற்கு மட்டும் ஸ்கேன் செய்யுங்கள். பேமெண்ட் பெறுவதற்கு அவ்வாறு ஸ்கேன் செய்ய வேண்டாம்.
தேவையற்ற அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய வேண்டாம்:
ஸ்கிரீன் ஷேரிங் அல்லது SMS ஃபார்வர்டிங் அப்ளிகேஷன்களை அவற்றின் உண்மையான பயன் அறியாமல் தெரியாத நபர்கள் சொல்லி டவுன்லோட் செய்யாதீர்கள்.
SMS நோட்டிஃபிகேஷன்களை சரி பார்க்கவும்:
வழக்கமான முறையில் உங்களது SMS நோட்டிஃபிகேஷன்களை சரிப்பாருங்கள். குறிப்பாக ஒரு ட்ரான்ஸாக்ஷன் நிறைவு செய்த பிறகு கட்டாயமாக SMS -ஐ பார்க்கவும்.
UPI மூலமாக டிஜிட்டல் பேமெண்ட் செய்யும் பொழுது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்:
போலியான அப்ளிகேஷன்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்:
UPI அப்ளிகேஷன்களை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் பிளே ஸ்டோர் போன்ற அதிகாரபூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே டவுன்லோட் செய்யவும்.
பேமெண்ட் செய்வதற்கு முன்பு UPI ID வெரிஃபை செய்யவும்:
எப்பொழுதும் பேமெண்ட் செய்யும் முன் UPI ID-ஐ ஒருமுறைக்கு இருமுறை சரி பாருங்கள்.
OTP -ஐ பிறருடன் பகிர வேண்டாம்:
வங்கி அதிகாரிகளிடம் கூட உங்களது UPI PIN அல்லது OTP போன்றவற்றை ஷேர் செய்ய கூடாது.
சந்தேகத்திற்குரிய லிங்கை கிளிக் செய்ய வேண்டாம்:
பேமெண்ட்களை துவங்கவும் அல்லது தனிநபர் மற்றும் பொருளாதார விவரங்களை நிரப்பவும் மோசடிக்காரர்கள் லிங்குகளை ஷேர் செய்வார்கள் ஒருபோதும் அவற்றை கிளிக் செய்ய வேண்டாம்.