அட்டகாசமான லுக்கில் ஹீரோ நிறுவனத்தின் புதிய பைக்.. விலையை கேட்டா அசந்து போயிடுவீங்க!

தங்களது 40வது ஆண்டை கொண்டாடும் விதமாக உள்நாட்டு டூவீலர் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், ஜனவரி 23ம் தேதி Xtreme 125R என்ற புதிய பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி ஹீரோ வேர்ல்டு 2024 நிகழ்ச்சியில் நவீன ரோட்ஸ்டெர் Mavrick 440 பைக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளதோடு விரைவில் Karizma பைக்கிற்கான முன்பதிவு தொடங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது ஹீரோ நிறுவனம்.

விலை:

Hero Xtreme 125R பைக்கின் ஆரம்ப விலை ரூ.95,000 ஆகும். ஹீரோ நிறுவனத்தில் இதற்கு முன் இப்படியொரு ஸ்டைலிஷான பைக்கை பார்த்திருக்க முடியாது என்று சொல்லுமளவிற்கு இதன் வடிவமைப்பு உள்ளது. வழக்கமான ஹீரோ பைக் வாடிக்கையாளர்கள் ப்ரீமியம் லுக்கில் பைக் வாங்க வேண்டுமென்றால் இதை தாராளமாக தேர்வு செய்யலாம்.

சிறப்பம்சங்கள்:

Hero Xtreme 125R பைக்கில் முழுமையான LED விளக்குகளும் தனித்துவமான தோற்றத்தில் LCD பேனலும் அமைந்துள்ளது. இந்த பைக் சிங்கிள் சேனல் ABS மற்றும் IBS வசதியைக் கொண்டுள்ளது.

போட்டியாளர்:

Hero Xtreme 125R பைக்கிற்கு சிறந்த போட்டியாளராக டிவிஎஸ் நிறுவனத்தின் Raider 125 பைக்கை கருதலாம். இதன் விலையும் ஏறக்குறைய ரூ.95,000 என்ற அளவில் தான் உள்ளது. இந்த Raider 125 பைக் சிங்கிள் டிஸ்க் மாடலில் வருகிறது.

வடிவமைப்பு:

Hero Xtreme 125R பைக் ஸ்போர்டிவ் லுக்கில் உள்ளது. பைக்கின் முன் பக்கத்தில் கொஞ்சம் ஆக்ரோஷமான தோற்றத்தில் LED ஹெட்லைட் உள்ளது. இதன் வடிவமைப்பு Xtreme 200S பைக்கில் உள்ளது போலவே இருக்கிறது. எரிபொருள் டேங்கும் பைக்கின் பின் பாகமும் நன்றாக உள்ளது. ஸ்பிலிட் சீட் வசதி நிறைவுத்தன்மையை தருகிறது.

நிறம்:

Hero Xtreme 125R பைக் சில்வருடன் கூடிய நீலம், கருப்பு, சிவப்புடன் கூடிய கருப்பு என மூன்று நிறங்களில் வருகிறது.

பவர்:

125சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் இஞ்சினில் இயங்கும் Hero Xtreme 125R பைக், அதிகபட்சமாக 11.5bhp பவரையும் 10.5Nm இழுவிசையும் கொண்டுள்ளது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ்களைக் கொண்டுள்ள இந்த பைக், முன்பக்கத்தில் 37mm டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோ ஷாக் வசதியைக் கொண்டுள்ளது. பிரேக்கைப் பொறுத்தவரை, முன்பக்கம் டிஸ்க் பிரேக்கும் பின்பக்கம் டிரம் அல்லது டிஸ்க் பிரேக் உள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்கின் விலை:

Hero Xtreme 125R பைக் அறிமுகமாகவுள்ளது என்ற செய்தி தெரிந்ததும், ஜனவரி 23-ம் தேதி ஹீரோ நிறுவனத்தின் பங்குகள் 2.72 சதவிகிதம் உயர்ந்து மும்பை பங்குச் சந்தை சென்சஸ் குறியீட்டில் ரூ.4,522.65-ஐ எட்டியது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *