வெறித்தனம் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள்; சென்செக்ஸ், நிஃப்டியை செக் பண்ணுங்க!

Share Market News Today | Sensex | Nifty | Share Prices| இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்றைய அமர்வை உயர்வில் நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 28.50 புள்ளிகள் அல்லது 0.13% உயர்ந்து 21,647.20 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 63.47 புள்ளிகள் அல்லது 0.09% அதிகரித்து 71,721.18 ஆகவும் காணப்படடது.
நிஃப்டி நெக்ஸ்ட் 50 மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் மூலம் ஆதாயங்களுடன் பரந்த குறியீடுகள் உயர்வில் மூடப்பட்டன. பேங்க் நிஃப்டி குறியீடு 77.50 புள்ளிகள் அல்லது 0.16% உயர்ந்து 47,438.35-ல் முடிந்தது.
ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள்
ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள் 6.2% உயர்ந்து ரூ.4,395 ஆக இருந்தது. ஹீரோவின் X440 பதிப்பு ஜனவரி 23 அன்று அறிமுகமாகும். இதையடுத்து பங்குகள் கணிசமாக விலை உயர்ந்தன.
பங்குகள் நிலவரம்
ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, ஈஸர் மோட்டார்ஸ், இண்டஸ்இந்த் வங்கி மற்றும் ஆக்ஸிஸ் வங்கி ஆகியவை நிஃப்டி-50 இல் அதிக லாபம் ஈட்டியுள்ளன.
டாக்டர் ரெட்டிஸ் லேப், இன்ஃபோசிஸ், நெஸ்லே இந்தியா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் ஆகியவை நிஃப்டி 50 இல் அதிக நஷ்டமடைந்தன.