முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும் “செம்பருத்தி க்ரீம்” – தயார் செய்வது எப்படி?
முகத்தை தங்கம் போல் ஜொலிக்க வைக்கும் “செம்பருத்தி க்ரீம்” – தயார் செய்வது எப்படி?
முகம் கருப்பாக இருப்பதை பல பெண்கள் விரும்ப மாட்டார்கள்.
இதனால் முகத்தை வெள்ளையாக்க கிடைக்கும் க்ரீம்களை முகத்திற்கு அப்ளை செய்கின்றனர். இதனால் முகம் வெள்ளையாகுமா? என்றால் நிச்சயம் ஆகாது. நிறத்தை மாற்றுவது சற்று கடினம் தான். ஆனால் இயற்கை முறையில் சரும நிறத்தை அதிக செலவின்றி மாற்ற முடியும்.
தேவையான பொருட்கள்…
*செம்பருத்தி பூ
*கற்றாழை
*தேங்காய் எண்ணெய்
*அரிசி மாவு
*ரோஸ் வாட்டர்
செம்பருத்தி க்ரீம் தயார் செய்யும் முறை…
பத்து செம்பருத்தி பூவை 2 கிளாஸ் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.
ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் அரிசி மாவு மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து விடவும். அடுத்து அதில் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல் மற்றும் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு தயார் செய்து வைத்துள்ள செம்பருத்தி தண்ணீரை ஊற்றி நன்கு குழைத்து எடுத்துக் கொள்ளவும். இதை ஒரு டப்பாவில் போட்டு சேமித்து தினமும் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் முகம் பொலிவாக இருக்கும்.