பால் விலையை அதிரடியாக உயர்த்திய இமாச்சல்..!
இமாச்சல பிரதேச மாநில முதல்வரும், நிதி அமைச்சருமான சுக்விந்தர் சிங் சுகு சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது இவரால் தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட்டில் நடப்பாண்டின் பாலின் விலை உயர்த்தப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது தற்போது ரூ.38/- க்கு விற்கப்படும் ஒரு லிட்டர் பாலின் நிலையான சந்தைப்படுத்துதல் விலையில் (MSP) ரூ.7/- முதல் ரூ.17/- வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வின் படி, ஒரு லிட்டர் பசும்பாலின் விலை ரூ.45/-க்கும், ஒரு லிட்டர் எருமை பாலின் விலை ரூ.55/- க்கும் விறக்கப்படும். மேலும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள ராஜீவ் காந்தி பிரக்ரியா கெதி யோஜனா என்ற திட்டம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய நுட்பங்களைப் பயிற்றுவிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி ஒவ்வொரு பஞ்சாயத்திலும் 10 விவசாயிகள் வீதம் 36,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.