இந்தி திணிப்பு Vs இந்தி படிப்பு குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி!
மெரி கிறிஸ்துமஸ் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சஞ்சய் கபூர், சண்முகராஜன் , நடிகைகள் கத்ரினா கைஃப், தீபா வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர்
இது நடந்தது ஆச்சரியமாக இருந்தது. நம் வாழ்க்கையில் சில நல்ல விஷயங்கள் நம்மை கேட்காமல் வந்து விடும். இயக்குநர் ஸ்ரீ ராம், 96 படம் பார்த்து விட்டு என்னிடம் கூப்பிட்டு பேசினார். ஐநாக்ஸ் தியேட்டரில் பத்னாபூர் படம் பார்த்தேன் ரொம்ப பிடித்திருந்தது. இவருடன் ( இயக்குநர் ஸ்ரீ ராம்) வேலை செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது. மெரி கிறிஸ்துமஸ் படம் பண்ணலாம் என்று கதை சொன்னார். ஜனவரி 16 என் பிறந்த நாளில் அக்ரிமென்ட் போடலாமே என்று சொன்னதாக அந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டு பேசினார்.
“கத்ரினா கைஃபை பார்த்தது சந்தோஷமாக, பெரிய கம்போர்ட்டாக இருந்தது எனவும், இந்த படம் நல்லா வந்திருக்கிறது என்றும், ஹிந்தி பேசும் போது எப்படி இருந்தது என்ற கேள்விக்கு, இந்தி பேசும் போது எனக்கும் இதே மாதிரி தான் இருந்தது. நான் துபாயில் இருக்கும் போதே, அங்கு ஹிந்தி பேசுவோம். நான் ஹிந்தி பேசியே 17 வருடம் ஆகி விட்டது. இன்னும் ஹிந்தி கொஞ்சம் முன்ன பின்ன தான் இருக்கிறது என்றும், துபாயில் வேலை பார்த்தது தான் ஹிந்தி ஓரளவுக்கு பேச முடிந்தது” என்று கூறினார்.