இவரது ஷூக்கள் மட்டும் ரூ. 20 லட்சம்!! இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண் தொழிலதிபரை தெரிந்து கொள்ளுங்கள்…

இந்தியாவின் பிரபல பெண் தொழில் அதிபர்களில் ஒருவராக இருப்பவர்தான் நமிதா தாபர்.

இவர் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஷூக்களை அணிந்ததன் மூலமாக இணையத்தில் அதிக கவனத்தை பெற்றிருந்தார்.

இதைத் தொடர்ந்து யார் இந்த நமிதா தாபர் என நெட்டிசன்கள் அதிகம் இணையத்தில் தேடத் தொடங்கி அவரை ட்ரெண்டாக்கினர்.

ஷார்க் டேங்க் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றதன் மூலம் நமிதா தாபர் அதிக பிரபலம் அடைந்தார்.

வர்த்தகத்துடன் ஃபேஷன் பிரியரைப் போன்று இவர் அணியும் உடைகள், ஆபரணங்கள் உள்ளிட்டவை இணையத்தில் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

ஷார்க் டேங்க் நிகழ்ச்சியின்போது இவர் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஷூவை அணிந்து பரபரப்பாக பேசப்பட்டார்.

நமிதாவுக்கு BMW X7, Mercedes-Benz GLE மற்றும் Audi Q7 உள்ளிட்ட சொகுசு கார்கள் உள்ளன.

புனேவில் உள்ள இவரது வீடு ரூ. 50 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

நமிதா தாபருக்கு ஒட்டு மொத்தமாக ரூ. 600 கோடிக்கும் அதிகமாக சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எம்க்யூர் மருந்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், மல்டி பிஸ்னஸ் செய்வோராகவும் இருந்து வருகிறார் நமிதா தாபர்.

இளம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் நிறுவனத்தை நமிதா தாபர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

எழுத்தாளர், பேச்சாளர், ஆலோசகர், கார்ப்பரேட் அதிகாரி என சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு நமிதா தாபர் ரோல் மாடலாக இருப்பதாக பாராட்டுகள் குவிந்துள்ளன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *