நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
இந்தியாவில் வட மாநிலங்களில் பசந்த பஞ்சமி எனப்படும் சரஸ்வதி பூஜை ஒவ்வொரு ஆண்டும் பிப். 14 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.வசந்த் பஞ்சமி என்பது இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இந்த நாளில் கல்விக்கு கடவுளான சரஸ்வதியை வணங்குவர். இதனை கொண்டாடும் வகையில் பள்ளிகள் விடுமுறை விடப்படுவது வழக்கம். இந்துக்களின் முக்கிய பண்டிகையாக இந்த பண்டிகை இருக்கிறது. மேலும் இது சரஸ்வதி தேவியின் பிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நல்ல நாளில் சிறு குழந்தைகளை கல்வி மற்றும் முறையான கற்றலுக்கு அறிமுகப்படுத்தும் சடங்கு நடத்தப்படுகிறது.
அதனால் சில மாநிலங்களில் பிப்.14 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்ற சில மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு பிப். 14 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வு அந்த தேதியில் நடத்தப்படாமல் இருக்க, முன்னதாக தேதி அட்டவணையை சரிபார்த்து கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.