இன்று மற்றும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!
தமிழகத்தில் வள்ளலார் நினைவு தினம் சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் அவருடைய நினைவு தினமான ஜன. 25 ஆம் தேதி மதுபான கடைகள் செயல்படாது. அதன் படி அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் இயங்காது.
மேலும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை விடுதிகளால் நடத்தப்படும் மதுபான கூடங்கள் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் உத்தரவை மீறி செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் நாளை 26ம் தேதி குடியரசு தினத்தை ஒட்டி மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த 2 நாட்கள் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது