ஈரோடு மாவட்டத்திற்கு மார்ச்.26 ம் தேதி விடுமுறை அறிவிப்பு..!

ஈரோடு சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலுக்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

அதேபோல, இந்த ஆண்டும் குண்டம் திருவிழா மார்ச் 11ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் கோலாகலமாகத் துவங்கியது. வரும் மார்ச் 26 ஆம் தேதி அன்று ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அன்று ஒரு நாள் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30ஆம் தேதி அன்று பணி நாளாக இருக்கும் என்றும், ஏற்கனவே பள்ளி கல்லூரிகளில் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும் தேர்தல் அலுவலர்களுக்கும் இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்ணாரி அம்மன் கோயிலின் சிறப்பு என்பது, குண்டம் இறங்குவதுதான். வேம்பு மரத்துண்டுகளை கோயில் முன் அடுக்கி, அதனை கற்பூரம் மூலம் தீயிட்டு 8 அடிக்கு உள்ளதை, 4 அடியாகச் சமன் செய்து, 15 நாள்கள் விரதம் இருந்து பூசாரி முதலில் குண்டம் இறங்குவார். அதனைத் தொடர்ந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்குவது வழக்கம். இங்கு தீ மிதித்து வழிபட்டால் நோய் நொடிகள் தீரும் என்பதும், வேண்டியது நிறைவேறும் என்பதும் ஐதீகம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *