இன்று காரைக்கால் மற்றும் வேதாரண்யம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த மஸ்தான் சாகிப் வலியுல்லா என்ற இறைதூதர், 18-ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்தார். அவர், இந்தியாவில், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணி செய்தார்.

பின்னர் காரைக்காலில் தங்கி இருந்தபோது அவர் இயற்கை எய்தினார். அவரின் நினைவாக காரைக்காலில் கட்டப்பட்ட மஸ்தான் சாகிப் வலியுல்லா தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டு இன்று பிப்ரவரி 20-ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதற்காக காரைக்கால் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை கண்ணாடி ரதம் மற்றும் பல்லக்கு ஊர்வலம் நடத்தப்பட்டு, தர்காவின் முன்பு நிறுவப்பட்ட பிரதானக் கொடிக் கம்பத்திலும், மினராக்களிலும் கொடிகள் ஏற்றப்படும்.

இதனை முன்னிட்டு கந்தூரி விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவிற்காக இன்று பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் பிறப்பித்துள்ளார்.

அதே போல், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம். மேலும், பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று கூறும் சிறப்புமிக்க கோவிலாக திகழ்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று (பிப். 20) நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருள உள்ளார். இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் உள்ளுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *