Holiday Tips : விட்டாச்சு லீவு! டிவி, செல்போன் என முடங்காமல் விடுமுறையை பயனுள்ளதாக்கும் வழிகள்!
தினமும் உடற்பயிற்சிகள்
இந்த விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் உடற்பயிற்சிகள் செய்ய கற்றுக்கொடுங்கள். தினமும் அவர்கள் ஏற்கனவே ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது உடற்பயிற்சி செய்கிறார்கள் என்றால், விடுமுறை காலத்தில் அதை அதிகப்படுத்துங்கள்.
இது கொஞ்சம் குளிரை ஏற்படுத்தும் காலம். எனவே குழந்தைகளுக்கு கூடுதல் பயிற்சிகள் கொடுத்து அவர்கள் அதிகம் தண்ணீர் எடுத்துக்கொள்ள ஊக்கப்படுத்துங்கள். அவர்களை வெளியில் எங்காவது அழைத்துச்சென்று இலக்கின்றி ஓடவிடுங்கள். அவர்களை கத்தவிடுங்கள். நாள் முழுவதும் அவர்களை விளையாடவிடுங்கள். நீங்களும் அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள். மகிழ்ந்திருங்கள்.
உங்கள் குடும்ப பாரம்பரியங்களை கற்றுக்கொடுங்கள்
உங்களின் குழந்தைப்பருவ விடுமுறை நாட்களில் நீங்கள் செய்ததை அவர்களும் செய்ய அனுமதியுங்கள். உங்களுக்கு பிடித்த விளையாட்டுக்களை உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள் விளையாடியதை அவர்களுக்கு கற்றுகொடுங்கள்.
அது அவர்களுக்கு விடுமுறை கொண்டாட்டத்தை கொடுக்கும். இது உங்களின் நினைவுகளையும் மீட்டுக்கொள்வதற்கு உகந்த நேரம் ஆகும். இது உங்கள் குடும்பத்துடன் அவர்களை நெருங்கவும் உதவும். உங்கள் குடும்ப பழக்கவழக்கங்கள் குறித்தும் உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.
அவர்களின் உணவுப்பழக்கத்தை பாருங்கள்
சில குழந்தைகள் விடுமுறை என்பதால் சர்க்கரை, ஐஸ்கிரீம் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு, உடல் நலன் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்களுக்கு தேவையான சரிவிகித உணவு கொடுப்பதை இந்த விடுமுறை நாட்களில் உறுதிப்படுத்துங்கள்.
அவர்களுக்கு பிறருக்கு கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை உணர்த்துங்கள்
சில குழந்தைகள் பிறருக்கு ஏதேனும் கொடுப்பதற்கு தயங்குபவர்களாக இருப்பார்கள். அவர்கள் வாங்கி மட்டுமே பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். ஆனால் பிறருக்கு கொடுப்பது எத்தனை மகிழ்ச்சி நிறைந்தது என்று அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இப்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகள் வருகிறது. இந்த பண்டிகை காலங்களில் பிறருக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு கொடுப்பது எத்தனை இன்பத்தை தரும் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
விடுமுறை என்றாலும், அன்றாட வேலைகளை கைவிடாதீர்கள்
நீங்கள் தினசரி ஒரு வழக்கத்தை கடைபிடிப்பீர்கள். அதை விடாமல் தொடர்ந்து பின்பற்றுங்கள். சிலர் உறவினர் வீடுகளுக்கு குழந்தைகளை அழைத்துச்செல்வார்கள். அப்போது அவர்களின் வழக்கமான நடைமுறைகள் மாறுபடும். ஆனால் அங்கும் அவர்களின் வழக்கமான நடைமுறைகளை மாற்றாதீர்கள். இது அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவும்.
மற்றவர்களுக்கு உதவுவது குறித்து கற்றுக்கொடுங்கள்
நிறைய பள்ளிகள் மற்றும் சர்சுகள், சமுதாயங்கள் என அனைத்தும் விடுமுறை நாட்களில் குழந்தைகள் மற்றவர்களுக்கு உதவக்கூடிய சேவை பணியை ஒருங்கிணைப்பார்கள். அதில் உங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். உதவி தேவைப்படும் யாருக்காவது உங்கள் குழந்தைகளை உதவ வலியுறுத்தினீர்கள் என்றால், அவர்கள் உதவி குறித்தும் தெரிந்துகொள்வார்கள். இந்த விடுமுறையும் அவர்களுக்கு உபயோகமானதாக இருக்கும்.
போதிய தூக்கம்
பள்ளி செல்லும்போது அவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுந்திருப்பார்கள். எனவே. அவர்கள் விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் உறங்கட்டும். அதுதான் அவர்களின் உடல் நலனுக்கு நல்லது. ஆனால் விடுமுறை நாட்கள் முடிந்தவுடன் அவர்களின் பழக்கத்தை மாற்றிவிடவேண்டும்.
நன்றியுணர்வுடன் உங்கள் குழந்தையை வளர்க்க வேண்டும்
விடுமுறையில் நாம் பல்வேறு இடங்களுக்கு சென்றிருப்போம். அவை குறித்த நினைவுகள், அதில் நன்றி செலுத்த வேண்டிய நபர்கள் என உங்கள் குழந்தைகள் நன்றி செலுத்துவதற்கு கற்றுக்கொடுங்கள். இந்த விடுமுறையில் அவர்கள் சந்தித்த அனைத்திலும் மகிழ்ச்சியுடன் அவர்கள் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
உங்களை நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள்
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அது உங்கள் குழந்தைக்கும் பரவிவிடும். எனவே உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் அனைத்தையும் செய்யுங்கள். அதுவே உங்கள் குடும்பத்துக்கும் நன்மையாக அமையும். எனவே உங்களையும், உங்கள் குழந்தைகளையும் நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்.
மகிழ்ந்திருங்கள்
உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ந்திருங்கள். இந்த நேரம் திரும்ப கிடைக்காது. எனவே, உங்கள் குழந்தைகளுடன் மகிழ்ந்திருங்கள்.