வீடே மணக்கும் இட்லி பொடி : இப்படி வறுத்து அரைக்க வேண்டும்
ஒரு முறை இந்த முருங்கை இட்லி பொடியை செய்து பாருங்க. நல்ல ரெசிபி இது.
தேவையான பொருட்கள்
முருங்கைக்கீரை – 3 கப்
அரை கப் உளுந்தம் பருப்பு
அரை கப் கடலை பருப்பு
1 டேபிள் ஸ்பூன் மல்லி
அரை டீஸ்பூன் சீரகம்
8 வர மிளகாய்
6 பூண்டு
உப்பு தேவையான அளவு
1 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
செய்முறை : முருங்கை இலையை அடுப்பில் வறுத்து கொள்ள வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து உளுந்தம் பருப்பு கடலை பருப்பு தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து மல்லி, சீரகத்தை சேர்த்து வறுக்க வேண்டும்.
மிளகாய், பூண்டு சேர்த்து வறுக்க வேண்டும். தொடர்ந்து வறுத்த எல்லா பொருட்களையும், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.