ரூ.1.20 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் ஹோண்டா கார்ஸ்

இந்திய சந்தையில் ஹோண்டா கார்ஸ் மார்ச் 2024 ஆம் ஆண்டு விற்பனையை முன்னிட்டு ரூ.50,000 முதல் ரூ.1.20 லட்சம் வரை தனது எலிவேட் எஸ்யூவி, அமேஸ் மற்றும் சிட்டி காருக்கு வழங்குகின்றது.

எலிவேட் அறிமுகத்திற்கு பின்னர் தொடர்ந்து ஹோண்டா விற்பனை சீராக அதிகரித்து வருவதுடன் மாதாந்திர ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. 2023-2024 நிதியாண்டின் முடிவை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை வழங்கப்படுகின்றன.

Honda Cars discounts March 2024
பிரபலமான எலிவேட் மாடலுக்கு நேரடியாக ரூ.50,000 வரை ரொக்க தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடலின் விலை ரூ.11.58 லட்சம் முதல் ரூ.16.20 லட்சம் வரை கிடைக்கின்ன்றது.

ரூ.7.16 லட்சம் முதல் கிடைக்கின்ற ஹோண்டா அமேஸ் செடானுக்கு ரூ.90,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.35,000 வரை ரொக்க தள்ளுபடி அல்லது ரூ.41,653 மதிப்புள்ள இலவச ஆக்சஸெரீஸ்கள் வேரியண்டின் அடிப்படையில் கிடைக்கிறது.

மற்ற சலுகைகளில் ரூ.20,000 வரையிலான கார்ப்பரேட் போனஸ், ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 வரையிலான லாயல்டி போனஸ் ஆஃபர் உள்ளது. கூடுதலாக, அமேஸின் எலைட் வேரியண்டின் சிறப்பு எடிசனுக்கு மட்டும் ரூ.30,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.

ஹோண்டாவின் பிரசத்தி பெற்ற சிட்டி காருக்கு ரூ.1.20 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கின்றது. ரூ. 30,000 வரை நேரடி ரொக்க தள்ளுபடி அல்லது ரூ.32,196 மதிப்புள்ள இலவச ஆக்சஸெரீகளைத் தேர்வு செய்யவும்.

மற்ற நன்மைகளில் ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.20,000 வரை கார்ப்பரேட் போனஸ் மற்றும் ரூ.4,000 லாயல்டி போனஸ் ஆகியவை தள்ளுபடியில் உள்ளன. கூடுதலாக, எலிகன்ட் டிரிமில் ரூ. 36,500 வரையிலான சிறப்பு நன்மையும், VS மற்றும் ZX டிரிம்களில் ரூ. 13,651 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் (நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டுகள்) வழங்கப்படுகிறது.

ஆனால் சிட்டி ஹைபிரிட் காருக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *