இந்தியாவில் ஹோண்டா தொழிற்சாலை பெருசாகிட்டே வருது!! ஜப்பான்காரர்களின் ஐடியா எல்லாம் வொர்க் அவுட் ஆகுது!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம் குஜராத்தில் உள்ள அதன் விதாலாபுர் தொழிற்சாலையில் 3வது அசெம்பிளி லைனை திறந்துள்ளது. இந்த திறப்பு நிகழ்ச்சியில் ஹோண்டா நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப்புக்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. ஆக்டிவா, இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் மிக பெரும் நம்பிக்கைக்குரிய மாடலாக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா ஆகும்.
ஆக்டிவா உள்பட மாதந்தோறும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் ஹோண்டா நிறுவனத்துக்கு இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் விதாலாபுர் என்ற பகுதியில் தொழிற்சாலை உள்ளது. ஹோண்டாவின் இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 6.5 இலட்ச 2-வீலர்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில், ஹோண்டா விதாலாபுர் தொழிற்சாலையில் 3வது அசெம்பிளி லைன் திறக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளில் அசெம்பிளி லைன் என்பது முழுவதுமாக உருவாக்கப்பட்ட பின் வாகனங்கள் நிறுத்தப்படும் பகுதி ஆகும். அதாவது, அனைத்து விதமான சோதனைகளும் நிறைவு செய்யப்பட்ட பின்னர் ஷோரூம்களுக்கு செல்ல தயாராகும் வாகனங்கள் அசெம்பிளி லைனில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அசெம்பிளி லைன் பெரிய அளவில் இல்லாததினால் சில ஆட்டோமொபைல் நிறுவனங்களின் உற்பத்தி பணிகள் கூட கடந்த காலங்களில் முடங்கி உள்ளன.
ஹோண்டாவின் 3வது அசெம்பிளி லைன் ஆனது பிரபலமான ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய அசெம்பிளி லைன் திறப்பால் ஹோண்டா நிறுவனத்தால் 250சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி என்ஜின் உற்பத்தியில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என கூறப்படுகிறது.
இவ்வாறு தொழிற்சாலையை விரிவுப்படுத்தும் அதேநேரம், தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் ஹோண்டா முனைப்புடன் உள்ளது. ஹோண்டாவின் விதாலாபுர் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 75% எலக்ட்ரிக் ஆற்றல் ஆனது புதுப்பிக்கத்தக்கவை என ஹோண்டா நிர்வாகம் கூறுகிறது.
அத்துடன் மழைநீர் சேகரிப்பு அமைப்பையும் இந்த தொழிற்சாலையில் ஹோண்டா கொண்டுள்ளது. அதேநேரம் சமூக அக்கறையிலும் ஹோண்டா எந்தவொரு குறையையும் வைத்ததில்லை. அதாவது சுகாதாரம், கல்வி, சாலை பாதுகாப்பு மற்றும் பாலின ஒற்றுமை விஷயங்களில் ஹோண்டா தொடர்ந்து தனது ஈடுப்பாட்டை காண்பித்து வருகிறது.
2030ஆம் ஆண்டிற்குள் கார்பன் நியூட்டலிட்டியை அடைந்து வேண்டும் என கொள்கை உடன் செயல்பட்டுவரும் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விதாலாபுர் தொழிற்சாலையில் கார்பன் வெளியேற்றுத்தல் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இதன் மூலமாக ஆட்டோமொபைல் துறையில் ஓர் உயர் தரத்திலான நிலையை அமைப்பதை ஹோண்டா நோக்கமாக கொண்டுள்ளது.