தேனி இளைஞர்களே ரெடியா ? இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்..!
தேனி மாவட்ட அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் வருகின்ற சனிக்கிழமை (10.02.2024) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் இருவேறு இடங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசின் முன்னோடி திட்டமான ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது” இரண்டு வாரங்களில் 30 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மார்க்கெட்டிங், பிராண்டிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் “மகளிர் தொழில் முனைவோர் முகாம்” தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
இம்முகாம் 10.02.2024 அன்று தேனி மாவட்ட தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உழவர் பயிற்சி மையத்தில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் நாளைக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இம்முகாம் குறித்த கூடுதல் தகவலை 9385299717 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம். தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் மூலம் இம்முகாம் நடத்தப்படவுள்ளது.
மேலும் இரண்டாவதாக “தனியார் வேலைவாய்ப்பு முகாம்” 10.02.2024 அன்று ஆண்டிபட்டி பாரத் நிகேதன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமை தேனி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாடு செய்துள்ளது. இம்முகாமில் 150-க்கும் மேலான தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளவுள்ளது. 08ம் / 10ம் / 12ம் வகுப்பு, டிகிரி, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பி.இ முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
இம்முகாமிற்கு வரும் நபர்கள் ஆதார் நகல் மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகலை உடன் கொண்டு வர வேண்டும்.