Honey Chilli Potato : ஹனி சில்லி உருளைக்கிழங்கு! குழந்தைகள் விரும்பி உண்ணும் ஸ்னாக்ஸ்!
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 6
சோள மாவு – ஒரு ஸ்பூன்
பூண்டு – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – அரை நறுக்கியது
பச்சை குடைமிளகாய் – கால் கப் நறுக்கியது
உப்பு – தேவையான அளவு
மிளகு தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
சோயா சாஸ் – ஒரு ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 ஸ்பூன்
தக்காளி கெட்சப் – 2 ஸ்பூன்
தேன் – கால் கப்
வெங்காயத்தாள் கீரை – ஒரு கைப்பிடி
வெள்ளை எள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை –
உருளைக்கிழங்கின் தோலை நீக்கி நீளவாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து சரியான பதத்திற்கு வேகவைத்து தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்த நன்றாக ஆறவிடவேண்டும்.
உருளைக்கிழங்கு ஆறியவுடன் சோள மாவை சலித்து சேர்த்து உருளைக்கிழங்குடன் நன்றாக கலந்துவிடவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானவுடன் உருளைக்கிழங்கை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அடுத்து ஒரு அகல கடாயில் எண்ணெய், நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து கலந்து விடவேண்டும்.
பின்னர் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து கலந்து விடவேண்டும்.
பின்னர் நறுக்கிய பச்சை குடைமிளகாய் சேர்த்து கலந்து விடவேண்டும்.
உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து கலந்துவிடவேண்டும்.
அடுத்து சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்சப் சேர்த்து கலந்து விடவேண்டும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு தேன் சேர்த்து கலந்து விடவேண்டும். பொரித்த உருளைக்கிழங்கை சேர்த்து மெதுவாக கலந்து விடவேண்டும்.
இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கீரை, வெள்ளை எள்ளு சேர்த்து கலந்து விடவேண்டும். சுவையான ஹனி சில்லி உருளைக்கிழங்கு தயார்.
உருளைக்கிழங்கு பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா? உருளைக்கிழங்கில் என்ன செய்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த உருளைக்கிழங்கு ஹனி சில்லியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இது இனிப்பாகவும், சூடாகவும் இருக்கும்போது சாப்பிடுவதற்கு அனைவருக்கும் பிடிக்கும். இதை ஸ்டாட்டராக பரிமாறலாம். இதை தக்காளி செட்அப்புடன் சூடாக பரிமாறவேண்டும். இது இந்திய-சீன உணவு வகையாகும். ஒருமுறை செய்தால் அடிக்கடி செய்வீர்கள்.