நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு ஹனிமூனா?.. சாய் பல்லவி தங்கச்சி யாருடன் எங்க போயிருக்காரு பாருங்க!
சென்னை: நடிகை சாய் பல்லவியின் தங்கையும் நடிகையுமான பூஜா கண்ணன் சமீபத்தில் தனது காதலர் வினீத் என்பவரை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார்.
இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.
இந்நிலையில், பூஜா கண்ணன் பனிபடர்ந்த இடத்துக்கு சுற்றுலா சென்றுள்ள போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார்.
பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் சாய் பல்லவி அடுத்து பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ராமாயணம் படத்தில் சீதையாக நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்கே 21: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 21 படத்தை பிக்பாஸ் நிகழ்ச்சிகளை இயக்கி வந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். விரைவில் அந்த பழத்தின் அப்டேட்கள் மற்றும் சம்மருக்கு படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாய் பல்லவி சினிமாவில் பிசியாக உள்ள நிலையில், அவரது சகோதரியான பூஜா கண்ணன் தனது காதலர் வினீத் உடன் சமீபத்தில் நிச்சயம் செய்து கொண்டார்.
தங்கைக்காக குத்தாட்டம்: தங்கை பூஜா கண்ணன் நிச்சயதார்த்தத்தில் ஒரு அம்மாவைப் போல பார்த்து பார்த்து தயார் செய்த சாய் பல்லவி நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் தங்கையுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.
காதலருடன் நிச்சயதார்த்தம்: ஸ்டன்ட் சில்வா இயக்கத்தில் சித்திரைச் செவ்வானம் படத்தில் நடித்த சினிமாவில் அறிமுகமான பூஜா கண்ணன் அதன் பின்னர் சினிமாவில் இருந்து விலகிய நிலையில், கடந்த மாதம் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். குடும்பத்துடன் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவின. பூஜா கண்ணனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதற்குள் ஹனிமூனா?: நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு தற்போது பூஜா கண்ணன் ஜப்பானில் உள்ள பனிப் படர்ந்த ஹொகாய்டோ என்னும் இடத்துக்கு சென்றுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ திரைப்படத்தில் “பூக்களே சற்று ஓய்வெடுங்கள்” பாடல் படமாக்கப்பட்ட இடத்திற்கு தான் தற்போது பூஜா கண்ணன் சென்றிருக்கிறார். அவரது போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் திருமணத்துக்கு முன்பாகவே ஹனிமூனா? என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.