Horsegram Dosai : சளி, இருமல் தொல்லைக்கு தோசையிலே தீர்வு உள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
கொள்ளு – அரை கப்
உளுத்தம் பருப்பு – கால் கப்
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
அவல் கால் கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை
பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி 4 மணி நேரங்கள் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் அவலை கழுவி அரைப்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் தோசை மாவு பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரங்கள் நன்றாக புளிக்கவிடவேண்டும்.
பின்னர் மாவை நன்றாக கலந்துவிட்டு, தோசை கல்லில் எண்ணெய் தேய்த்து சிறிதளவு மாவை ஊற்றி பரப்பி வேக விடவேண்டும்.
பின்னர் சுற்றிலும் நெய் ஊற்றி, பொன்னிறமானதும் மறுபக்கம் திருப்பிவிட்டு வேகவிடவேண்டும்.
சுவையான கொள்ளு தோசை தயார். இதற்கு எந்த சட்னி, சாம்பார் என எதை வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
கொள்ளு பருப்பால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மைகளை தருகிறது.
குறிப்பாக கொழுத்தவனுக்கு கொள்ளு என்பதன் மூலம் உடல் பருமன் அதிகம் கொண்டவர்களுக்கு கொள்ளு கொழுப்பை கரைக்க உதவுகிறது என்பது தெரியும்.
இதில் கஞ்சி சாதம், சூப் என வைத்து சாப்பிட முடியும். இதில் தோசையை செய்து சாப்பிடுவதன் மூலம் உங்களின் தினசரி உணவில் கொள்ளு பருப்பை சேர்த்துக்கொள்ள முடியும்.

வழக்கமான தோசைபோலவே செய்யப்படுவதுதான், அதில் கொள்ளு சேர்த்து செய்யப்படும்போது, உடலுக்கு அது கூடுதல் நன்மைகளை அளிக்கிறது.
இதை நீங்கள் காலையில் செய்து சாப்பிடும்போது, அது உங்கள் உடலுக்கு நாள் முழுவதுக்கும் தேவையான சத்தை வழங்குகிறது. இந்த குளிர் காலத்துக்கு இதமான கொள்ளு தோசையை அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.