ஹோட்டலில் ரூ.90 லட்சத்திற்கு உணவு பில்: டிப்ஸ் மட்டும் இத்தனை லட்சமா?
துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்ட வாடிக்கையாளர் குழு ஒன்றின் பில் சமூக ஊடக பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.
ரூ. 90 லட்சம் பில்
துருக்கியின் பிரபல சமையல் கலைஞரான நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே துபாயில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சமீபத்தில் வாடிக்கையாளர் குழு ஒன்று உணவு உண்பதற்காக இந்த ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வாடிக்கையாளர்கள் குழு சாப்பிட்ட ஹோட்டல் பில்லை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் ரூ. 90 லட்சம் ரூபாய்க்கு பில் தொகை குறிப்பிட்டுள்ளது.
அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கி காபி மற்றும் சமையல்காரின் பெயர் பதிக்கப்பட்ட இறைச்சி போன்ற உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
பிரபல சமையல் கலைஞரான சால்ட் பே இதனை “பணம் வரும் போகும்” என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.
20 லட்சம் டிப்ஸ்
ரூ. 90 லட்சம் உணவு பில்லுடன், அந்த வாடிக்கையாளர்கள் தாராளமாக சுமார் ரூ.20 லட்சத்தை டிப்ஸ்சாகவும் வழங்கியுள்ளனர்.
turkey customer pay 90 lakh on a single meal bill, ஹோட்டலில் ரூ.90 லட்சத்திற்கு உணவு பில்: டிப்ஸ் மட்டும் இத்தனை லட்சமா?
ரூ.90 லட்சம் மதிப்பிலான உணவு பில் வைரலான நிலையில், இணைய பயனர்கள் இதற்கு பலரும் விமர்சனத்தை பதிவிட்டு வருகின்றனர்.