இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..! இன்று வங்கி கணக்கில் வருகிறது ரூ.1000..!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்.15-ம் தேதி, அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில், தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஒவ்வொரு மாதம் 15 ஆம் தேதி ரூ.1,000 உரிமைத் தொகையை தமிழ்நாடு அரசு செலுத்தி வருகிறது.இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், , குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 இலட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது. இப்போது 1 கோடியே 7 இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இன்று வரவு வைக்கப்படவுள்ளது. தமிழகத்தில் சுமார் 1 + கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற்று வருகின்றனர். மேலும் பலர் இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து காத்துக் கொண்டிருக்கின்றனர். வரும் பட்ஜெட்டில் இத்திட்டம் தொடர்பான புதிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பு உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *