இல்லத்தரசிகள் மகிழ்ச்சி! தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் தங்கத்தின் விலை..!

டந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.

இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதன்படி, சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 10 ரூபாய் குறைந்து, ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ரூ.46,560-க்கு விற்பனையாகிறது.

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,776-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 9 ரூபாய் குறைந்து, ரூ.4,767-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 77,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.78,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.78.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *