இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! 47 ஆயிரத்தை தாண்டியதுஒரு பவுன் தங்கம் விலை..!
ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. ரூபாய் 47 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வரும் தங்கத்தின் விலையை கண்டு சுப காரியங்கள் நடத்த திட்டமிட்டுள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தங்கத்தின் விலை எப்போது குறையும் உயரும் என்று யாராலும் கணிக்க முடியாத நிலையே நீடித்து வருகிறது. நேற்றைய விலையை விட இன்று சவரனுக்கு ரூபாய் 80 உயர்ந்துள்ளது. அதன்படி 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூபாய் 47,120 க்கும், ஒரு கிராம் ரூபாய் 5290க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே போலவே 24 கேரட் தங்கமும் சவரன் ரூபாய் 50 ஆயிரத்து 880 ஆகவும், ஒரு கிராம் ரூபாய் 6360 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி சில்லறை விற்பனையில் ரூபாய் 78க்கும், ஒரு கிலோ 78,000 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.