மகம், பூரம், உத்தரம் நட்சத்திரத்திற்கு எப்படி இருக்கும்?
மகம் திட்டமிட்டு செயல்பட்டால் தொட்டவை துலங்கும் ஆண்டு. அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்.எதிர்பார்த்த இடமாற்றம் நிச்சயம் கிடைக்கும்.வெளியூர்,வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு.அனுபவஸ்தர்களிடம் சச்சரவு வேண்டாம்.பொறுப்புகளில் சலிப்பு கூடாது.
வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். உறவுகளுடன் அன்யோன்யம் ஏற்படும். இளம் வயதினரின் காதல்கனவு ஈடேறும். அசையும் அசையா சொத்து சேரும். வாரிசுகள் வாழ்வில் சுபிட்சம் வரும் பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்பு உண்டு..
தொழில் எது செய்தாலும் சோம்பல் தவிர்த்து உழைப்பது உன்னதம் தரும். புதிய ஒப்பந்தங்களில் அவசரம் கூடாது.அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்டப்புறம்பிற்கு இடம்தர வேண்டாம். அரசியலில் இருப்பவர்கள் மேலிடத்தின் ஆதரவில் மேன்மை பெறலாம். பொது இடங்களில் வாக்குத் தரவேண்டாம். அரசுப்பணியில் இருப்போர்க்கு உன்னத உயர்வுகள் வரும். எந்த சமயத்திலும் அவசரம் அலட்சியம் தவிருங்கள்.
சினிமா, கலை, படைப்பு, இசைத்துறையில் இருப்போருக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். இரவில் வெளி இடங்களில் நிதானமாக இருங்கள். வாகனத்தில் வேகம் வேண்டாம். காது, மூக்கு, தொண்டை உபாதைகள், சுவாசப் பிரச்னைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு, எண்ணங்கள் ஈடேறச் செய்யும்.
பூரம்
அமைதியாகச் செயல்படுவோர்க்கு அநேக நன்மைகள் கிட்டக்கூடிய ஆண்டு. அலுவலகத்தில் அவசரம், அலட்சியம் கூடாது. புறம்பேசும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். எதிர்பாரா இடமாற்றம் வந்தால்,தவிர்க்க வேண்டாம். பொறுப்புகள் எதையும் திட்டமிட்டுச் செய்ய்யுங்கள். ஊதிய உயர்வு தாமதமானாலும் நிச்சயம் கிட்டும். இல்லத்தில் சுபிட்சம் இடம்பிடிக்கும்.
தம்பதியர் இடையே அன்யோன்யம் உருவாகும். வாரிசுகளால் பெருமை சேரும். பெற்றோர் பெரியோர் உடல்நலத்தில் கவனம் தேவை. யாரிடமும் குடும்ப விஷயங்களைப் பேசவேண்டாம். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்து வையுங்கள். வரவை சேமிக்கப்பழகுங்கள். பெண்களுக்கு செல்வாக்கு உயரும். இளம் வயதினர் காதலில் அவசரம் வேண்டாம். தொழில் எதிலும் கவனமாக இருப்பது கணிசமான நன்மை தரும். கனரக வர்த்தகத்தில் அவசரம் கூடாது. கூட்டுத் தொழிலை நேரடியாக கவனியுங்கள்.
அரசியலில் இருப்போருக்கு ஆதரவு நிலைக்கும். அதேசமயம்,யாருக்கும் ஜாமீன், ஜவாப், உத்தரவாதம் தருவதைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வளர்ச்சி ஏற்படும். சின்சியராக உழைப்பது, எதிர்காலத்தையும் ஏற்றம் ஆக்கும்.சினிமா, இசை,கலை,படைப்புத் துறையினர், உழைப்புக்கு ஏற்ப பலன்களைப் பெறலாம். மாணவர்கள் தினம்தினம் படிப்பது அவசியம். இரவுநேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். கழிவு உறுப்பு, முதுகு, கழுத்து, தோள்பட்டை, நரம்பு உபாதைகள் வரலாம். பஞ்சவடி அனுமன் வழிபாடு, வாழ்வைப் பசுமையாக்கும்.
உத்தரம்
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் ஆண்டு. அலுவலகத்தில் அனுகூலமான சூழல் உருவாகும். தகுதிக்கு உரிய பெருமைகள் நிச்சயம் வந்து சேரும். தற்பெருமை தவிர்த்து செயல்படுவது நல்லது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உழைப்பில் சோம்பல் ஒருபோதும் கூடாது. வீட்டில் நிம்மதி நிலவத் தொடங்கும்.குழந்தைகள் உடல்நலம் சீராகி மகிழ்ச்சி தரும்.பழைய கடன்களை நேரடியாகப் பைசல் செய்யுங்கள்.
ஆடை, ஆபரணம் சேரும். சகோதர உறவுகளிடம் வீண் சண்டை வேண்டாம்.விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு நாவடக்கம் இருந்தால், நன்மைகள் அதிகரிக்கும். செய்யும் வர்த்தகத்தில் செழிப்பான சூழல் உருவாகும். ஏற்றுமதி, இறக்குமதியில் நேரடி கவனம் முக்கியம்.அரசியலில் இருப்போர் அகலக்கால் வைக்கவேண்டாம். முகஸ்துதி நபர்களை விலக்குங்கள்.
அரசுப்பணி செய்வோர், பொறுப்பு உணர்வுடன் செயல்படுங்கள். ஏற்றங்கள் தாமதமானாலும் நிச்சயம் வரும். கலைஞர்கள், சினிமாத் துறையினர் முயற்சிகளில் தளராமல் இருப்பது முக்கியம். வீண் ஜம்பம் ஒருபோதும் வேண்டாம். மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் படிப்பது நல்லது, தலைவலி, ரத்த அழுத்த மாற்றம்,எலும்புத் தேய்மானம், தோள்பட்டை, மூட்டு வலி வரலாம். பைரவர் வழிபாடு, வாழ்வைப் பசுமையாக்கும்.