சிஎஸ்கேக்கு வந்தால் மட்டும் எப்படி சில வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள்.. தோனி சொன்ன கலகல பதில்

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறது. இந்த தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தற்போது தீவிரமாக தயாராக உள்ளனர். சி எஸ் கே அணி தங்களுடைய பயிற்சி முகாமை வரும் மார்ச் மாதம் சென்னையில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் மற்ற அணியிலிருந்து கழற்றி விடப்படும் வீரர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வந்தால் மட்டும் எப்படி இவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள் என்று கேள்வி அனைவரும் மனதிலும் இருக்கிறது.

வாட்சன் முதல் ரஹானே வரை சிஎஸ்கே அணிக்காக மட்டும் அபாரமாக விளையாடி ரன்களை குவித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிஎஸ்கே கேப்டன் தோனியிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தோனி, இதற்குப் பின்னால் உள்ள ரகசியத்தை நான் கூறினால் என்னை யாருமே பிறகு அணியில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

எப்படி பெரிய கோலா நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்பு ரகசியத்தை கூறாமல் பாதுகாத்து வைத்திருக்கிறார்களோ, அதேபோல் நானும் இந்த ரகசியங்களை வெளியே சொல்ல மாட்டேன் என்று தோனி காமெடியாக பதில் அளித்தார். அதன் பிறகு உங்கள் வாழ்க்கையின் நம்பர் ஏழு ஏன் இவ்வளவு முக்கியத்துவமாக இருக்கிறது. உங்கள் ஜெர்சி நம்பரும் அதுவாக தான் இருக்கிறது.

அதற்கு பின்னால் என்ன காரணம் உள்ளது என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தோனி நான் பிறந்தது ஏழாவது மாதம், ஏழாவது நாள். மேலும் நான் பிறந்த வருடம் 1981. அதில் எட்டையும் ஒன்றையும் கழித்தால் மீண்டும் 7 தான் வரும். இதனால் எனக்கு ஏழு என்ற நம்பர் வாழ்க்கை முழுவதுமே பயணிக்கும். இதனால் தான் நான் இந்திய அணிக்காக விளையாடும்போது உனக்கு எந்த நம்பர் ஜெர்சி வேண்டும் என்று கேட்கப்பட்டதற்கு 7 கொடுங்கள் என்று பதில் அளித்தேன் என தோனி கூறினார்.

இதேபோன்று சிறந்த கிரிக்கெட் வீரராக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி திறமை இருந்தால் மட்டும் போதாது. திறமை இருப்பதால்தான் நீங்கள் முதலில் கிரிக்கெட்டே விளையாடுகிறீர்கள். அதனால் திறமையை வைத்து ஜெயிக்க முடியாது. அறிவுக்கூர்மை வேண்டும். விளையாடும் போது நாம் எந்த மாதிரி மாற்றங்களை செய்ய வேண்டும். எப்படி அடித்தால் ரன் வரும் என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

நான் எப்போதும் சொல்வது தான். உங்களுடைய இறுதி முடிவுக்கு நீங்கள் போராட வேண்டாம் .அதற்கு பதில் உங்களுடைய பயிற்சி செயல்முறையை நீங்கள் நம்பினாலே போதும். உங்களுடைய செயல்முறை பயணத்தில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வேண்டிய முடிவு வரும் வரை உங்களுடைய செயல் முறையை அறிவுக்கூர்மையை உடன் கலந்து மாற்றுங்கள். உங்களுடைய பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்து அறிவு கூர்மையுடன் நீங்கள் செயல்பட்டால் நிச்சயமாக நீங்கள் எதிர்பார்க்கும் முடிவு உங்களை வந்து சேரும் என்று தோனி பதில் அளித்தார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *