குடியரசு தினம் எப்படி உருவானது? ஏன் ஜனவரி 26-ம் தேதி தேர்வு செய்யப்பட்டது?

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26-ம் தேதி கொண்டாட தயாராகி வருகிறது. இந்த நிலையில் குடியரசு என்றால் என்ன ?? ஏன் ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடுகிறோம்?? இந்தியக் குடியரசு தினம் எப்படி உருவானது ? சுதந்திரம் பெற்று இரண்டு ஆண்டுக்களுக்கு பின் குடியரசு தினம் உருவாக காரணம் என்ன?? இந்தியா குடியரசு நாடாக உருவாக யார் யாரெல்லாம் முக்கிய பங்கு வகித்தார்கள்?? ஜனவரி 26-ம் தேதி ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது??.. இது போன்ற முக்கியமான கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவிற்கு ஐரோப்பியர்களின் வருகை :
1498-ஆம் ஆண்டு ஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்தார். அவரது பயணத்தின் தொடர்ச்ச்சியாக இந்தியாவின் வளமையையும் செல்வ செழிப்பையும் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன் இந்தியாவில் குடியேறினர். அவர்களின் வருகையை தொடர்ந்து போர்ச்சுகீசியர்கள், இந்தியாவின் கடலோர பகுதிகளான கோவா, டையூ, டாமன், பாம்பே ஆகிய இடங்களில் வணிக முகாம்களை அமைத்தனர்.
மேலும் பிரெஞ்சுக்காரர்கள், பிரிட்டிஷ்காரர்கள்,டச்சுக்காரர்கள் ஆகியோரும் இந்தியாவில் வணிக முகாம்களை ஏற்படுத்தி வணிகம் மேற்கொண்டனர். இந்தியாவில் குடியேறிய அனைத்து ஐரோப்பியர்களும் வணிகத்தை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் மட்டும் இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கிழக்கிந்திய கம்பெனி நிரந்தர வணிகத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷ்காரர்கள் :
நாளடவைல் பிரிட்டிஷ்காரர்கள் வரி செலுத்தமலேயே வணிகம் செய்ததால் அவர்களை வங்காளத்தின் நவாப் சிராஜ் உட துலாத் என்பவர் எதிர்த்ததால் 1757-ல் பிளாசிப் போர் நடந்தது. அதில் நவாப் ஆங்கிலேயர்களிடம் தோற்றதால் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் உள்ள நிலங்களை ஆக்கிரமிக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பல்வேறு போர்களின் மூலம் இந்தியா முழுவதையும் ஆக்கிரமித்தனர். வரிகள், நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றால் இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் பின் தங்கியது.
எழுச்சி பெற்ற சுதந்திர போராட்டங்கள்
ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைக் கண்டு வெகுண்டெழுந்த மக்கள் நாளுக்கு நாள் போராட்டங்கள்,கழகங்கள், புரட்சிகள் எனத் தொடங்கி ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டே விரட்டி எண்ணினர். ‘இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி’என்ற அமைப்பில் இணைந்த இந்திய மக்கள் ‘ஒத்துழையாமை இயக்கம்’ ‘சட்ட மறுப்பு இயக்கம்’ ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ ‘உப்பு சத்தியாகிரகம்’ எனப் பல்வேறு போராட்டங்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடத்தினர். இந்த போராட்டங்களின் விளைவாக, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு 15-ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்து சுதந்திர காற்றை சுவாசிக்க தொடங்கியது.
சரி.. குடியரசு என்றால் என்ன?
குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி ஆகும். அதாவது மக்கள், தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் முறைக்கு குடியாட்சி என அழைக்கப்படுகிறது. ‘மக்களுக்காக மக்களுடைய மக்கள் அரசு’ என குடியரசு என்ற வார்த்தைக்கு மிகச்சரியாக இலக்கணம் வகுத்து தந்தவர் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன். அப்படிப்பட்ட மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால் தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்.