இதெல்லாம் எப்படி சாப்பிடுறாங்க? கோபிநாத் ‘தாய்லாந்து மீன் மார்கெட்’ வீடியோ

கம்போடியா, லாவோஸ், வியட்நாம் போன்ற கம்யூனிச நாடுகள் சூழ்ந்திருக்க இன்றளவும் மன்னராட்சி நடக்கும் ஒரு நாடு தாய்லாந்து.

தாய்லாந்து ஒரு புத்தபூமி. கிட்டத்தட்ட 30,000 புத்த மடாலயங்கள் இங்கு உள்ளது. உலகத்தின் மிகப்பெரிய புத்தர் சிலைகளில் சில தாய்லாந்தில் தான் இருக்கிறது.

தாய்லாந்தின் அதிகாரப்பூர்வ மொழியாக ’தாய்’ மொழி இருக்கிறது. இந்த மொழி கெமர், பல்லவ கிரந்தம் மொழியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட மொழி. இதில் பல்லவ கிரந்தம் என்பது தமிழ்நாட்டின் பல்லவர்களைக் குறிப்பிட்டு தமிழைக் குறிப்பதாக சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தாய் மொழியில் பேசும் சில வார்த்தைகள் கூட தமிழ் மொழியோடு ஒத்துப் போவதாக இருக்கும். தமிழர்களின் சங்க கால கூத்து, பொம்மலாட்டங்கள், சிலம்பம் வீர பயிற்சிகள் தாய்லாந்தின் வழக்கத்திலும் இருந்து வருகிறது.

நமக்கு ஆங்கில வருடம் போக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 தமிழ் வருடபிறப்பு இருக்கிறது, சித்திரை, வைகாசி என 12 மாதங்கள் இருக்கிறது. அதுபோல தாய்லாந்தில் 12 மாதங்களுக்கும் ரிஷபம், மேஷபம், சிம்மம் என 12 ராசிகளின் பெயரைத் தான் சூட்டி உள்ளனர்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட தாய்லாந்து நாட்டுக்கு நீயா நானா புகழ் கோபிநாத் சமீபத்தில் சுற்றுலா சென்றார். அங்கு மீன் மார்கெட்டில் சுற்றிப் பார்த்தபோது எடுத்த வீடியோ இப்போது யூடியூபில் பலரை கவர்ந்துள்து

உங்களுக்கும் தாய்லாந்து நாட்டை சுற்றிப் பார்க்க ஆசையா?

வரும் மே 2024 வரை இந்திய மற்றும் தைவான் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா தேவைகளில் தாய்லாந்து அரசாங்கம் சலுகைகளை வழங்கி உள்ளது.

தாய்லாந்தை பொறுத்தவரை, இந்தியர்கள் விசா இல்லாமல் 30 நாட்கள் அங்கு தங்கலாம். துடிப்பான கலாச்சாரம், கலைநயமிக்க கோயில்கள், பரபரப்பான சந்தைகள் மற்றும் அழகிய கடற்கரைகளில் தங்களை மூழ்கடிக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *