ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 பைக் ஓட்ட எப்படி இருக்கு? ஷோரூம்ல கூட இவ்ளோ துள்ளியமா விளக்கி சொல்ல மாட்டாங்க!
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் சூப்பரான பைக் மாடல்களில் ஒன்றாக ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 இருக்கின்றது. இந்த பைக்கின் லேட்டஸ்ட் வெர்ஷனே தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஹஸ்க்வர்னாவின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாகவும் ஸ்வர்ட்பிளன் 401 காட்சியளிக்கின்றது. இந்த பைக்கையே சமீபத்தில் ரைடு ரிவியூ செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது.
புனேவின் அழகிய சாலைகளில் வைத்தே இந்த பைக்கை நாங்கள் ரைடு ரிவியூ செய்து பார்த்தோம். இதுபற்றிய விபரத்தையே தமிழில் வீடியோவாக தொகுத்து வழங்கியிருக்கின்றோம். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம். ஹஸ்க்வர்னா ஸ்வர்ட்பிளன் 401 சாலையில் எப்படியான அனுபவத்தை வழங்கியது? மற்றும் ஓட்டுவதற்கு எப்படி இருந்தது? இதுதவிர, பைக்கின் லுக் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றையும் இந்த வீடியோவில் விளக்கி இருக்கின்றோம். வாங்க வீடியோவைக் காணலாம்.
மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்டிருக்கம் இந்த ஸ்வர்ட்பிளன் 401 பைக்கில் 399 சிசி திறன் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் சிங்கிள் சிலிண்டர் டிஓஎச்சி எஞ்சின் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 45.6 பிஎச்பி பவரையும், 39 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது மிகவும் மென்மையான மற்றும் துள்ளியமான ஷிஃப்டிங் அனுபவத்தை வழங்கும். ஆகையால், இதன் கியர்பாக்ஸை கையாள்வது மிகவும் சுலபமானது உள்ளது. பைக்கில் பைரல்லி ஸ்கார்பியோன் ரேல்லி எஸ்டிஆர் வகை டயர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த டயரால் ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோட அனைத்தையும் களம் காண முடியும்.