எப்படி இது? சர்ஃபராஸ் கான் செய்த செயல்.. மிரண்டு போன இங்கிலாந்து கேப்டன்.. 5வது டெஸ்ட்டில் ட்விஸ்ட்
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஐந்து பேர் அரைசதம் அடித்து உள்ளனர். இங்கிலாந்து அணி ஒவ்வொரு பேட்ஸ்மேனை வீழ்த்தவும் பல திட்டங்களை செயல்படுத்தியும் எதுவும் கை கொடுக்காமல் சோர்ந்து போனது.
அதிலும் சர்ஃபராஸ் கான் நான்காவது டெஸ்ட் போட்டியில் சரியாக ரன் குவிக்கவில்லை. அப்போது அவ்ரியோ வீழ்த்த பயன்படுத்திய சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லியை ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் பயன்படுத்தினார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். ஆனால், அவர் நினைத்ததற்கு நேர் மாறாக ஆடினார் சர்ஃபராஸ் கான்.
இந்தப் போட்டியில் ஐந்தாம் வரிசையில் களமிறங்கிய சர்ஃபராஸ் கான் துவக்கத்தில் மிகவும் நிதானமாக ஆடினார். ரன் குவிக்க முயலாமல் பந்தை தடுத்து ஆடினார். கடந்த போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் டாம் ஹார்ட்லி ஓவர்களில் ரன் குவிக்க திணறிய சர்ஃபராஸ் கான் அவர் பந்திலேயே ஆட்டமிழந்து இருந்தார். அந்த திட்டத்தை கையில் எடுத்தார் பென் ஸ்டோக்ஸ்.
ஆனால், டாம் ஹார்ட்லி வரும் வரை நிதான ஆட்டம் ஆடிய சர்ஃபராஸ் கான், அதன் பின் அதிரடிக்கு மாறினார். அவரது ஸ்ட்ரைக் ரேட் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. அதனால், பென் ஸ்டோக்ஸ் திட்டம் வீணானது. பின்னர் சர்ஃபராஸ் கான் 60 பந்துகளில் 56 ரன்கள் குவித்தே வெளியேறினார்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 218 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 473 ரன்கள் குவித்துள்ளது. இங்கிலாந்து அணியை விட 255 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது இந்திய அணி.