ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எப்படி இவ்வளவு பேர் தைரியமா வாங்குறாங்க? ஹோண்டா ஆக்டிவாவை முந்திடும் போலயே!!

இந்தியாவில் கடந்த 2024 ஜனவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் அவற்றின் விற்பனை எண்ணிக்கைகள் உடன் வெளியாகியுள்ளன. அந்த 10 ஸ்கூட்டர்கள் என்னென்ன என்பதையும், 2023 ஜனவரியை காட்டிலும் கடந்த மாதத்தில் அவை எத்தனை யூனிட்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றியும் விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வழக்கம்போல் கடந்த ஜனவரி மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக ஹோண்டாவின் ஆக்டிவா முதலிடம். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், வழக்கத்தை காட்டிலும் கடந்த மாதத்தில் அதிக ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாத ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 1,73,760 ஆகும்.

2023 ஜனவரி மாதத்தில் வெறும் 1,30,001 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், கடந்த ஆண்டு இறுதி டிசம்பர் மாதத்திலும் 1,44,335 ஆக்டிவா ஸ்கூட்டர்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. அதாவது, இந்த மாதங்களை காட்டிலும் கடந்த ஜனவரி மாதத்தில் 30,000 – 40,000 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆக்டிவாவுக்கு அடுத்து 2வது இடத்தில் டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிட்டர் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 74,225 ஆகும். ஆக்டிவாவை போல், ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனையும் கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் அதிகரித்துள்ளது. 2023 ஜனவரியில் வெறும் 54,484 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகி உள்ள நிலையில், கடந்த மாதத்தில் ஏறக்குறைய 20 ஆயிரம் ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் அதிகம் விற்கப்பட்டுள்ளன.

மேலும், 2023 டிசம்பர் மாதத்திலும் 59,538 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. சுஸுகி ஆக்ஸஸ் 3வது இடத்தை பிடித்துள்ளது. ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பரில் 53,898 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் கொஞ்சம் அதிகமாக 55,386 ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன.

2023 ஜனவரி மாதத்தில் வெறும் 45,597 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. 4வது இடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஓலா எஸ்1 உள்ளது. இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் புதிய அத்தியாயத்தை உருவாக்கிவரும் ஓலா எஸ்1 ஸ்கூட்டர்கள் மொத்தமாக கடந்த மாதத்தில் 32,252 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன.

அதுவே, 2023 ஜனவரியில் வெறும் 18,353 எஸ்1 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. அதாவது, கடந்த 1 வருடத்தில் ஓலா எஸ்1 ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. டிவிஎஸ் எண்டார்க் மற்றும் ஹோண்டா டியோ ஸ்கூட்டர்கள் இந்த வரிசையில் 5வது மற்றும் 6வது இடங்களை பிடித்துள்ளன.

இவற்றின் கடந்த 2024 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 27,227 மற்றும் 25,114 ஆகும். இவற்றின் விற்பனையும் 2023 ஜனவரியை விட அதிகரித்துள்ளன. 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ள சுஸுகி பர்க்மேன் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கடந்த மாதத்தில் முறையே 15,869 மற்றும் 15,652 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 2 இடங்களில் ஹீரோ டெஸ்டினி (14,458) மற்றும் பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (14,144) உள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *