தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எத்தனை பேர்.? குறைந்த, அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதி எது.? வெளியான தகவல்

ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் இறுதிப்பட்டியல் ஜனவரி மாதம் வெளியிடப்படும் அந்த வகையில், 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைந்து கொள்ளலாம். அந்த வகையில், 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (22.01.2024) வெளியிடப்பட்டது. அதன் படி, சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13,88,121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13.61,888 விண்ணப்பங்கள் (ஆண்கள் 6,17,623; பெண்கள் 7.43.803; மூன்றாம் பாலினத்தவர் 462) ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி எது.?

இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,18,90,348 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,03,96,330; பெண் வாக்காளர்கள் 3.14.85,724 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,294 பேர்) பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட27-சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 6,60,419 வாக்காளர்கள் உள்ளனர். (ஆண்கள் 3,30,522 பெண்கள் 3,29,783; மூன்றாம் பாலினத்தவர் 114) தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட 164-கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,72,140 ஆவர். (ஆண்கள் 84,702; பெண்கள் 87,435; மூன்றாம் பாலினத்தவர் 3)

விடுபட்டவர்களுக்கு வாய்ப்பு

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு, வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை பட்டியலில் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *