முருக காவடியில் எத்தனை வகைகள்? எந்த காவடி எடுத்தால் என்னென்ன நன்மைகள்?

முருக பெருமானை தரிசிக்க வரும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற காவடி எடுத்து ஆடி வருதல் சிறப்பான அம்சமாக உள்ளது.

முருக பெருமானுக்கே உரித்தான காவடியில் பல வகைகளும், வகைகளுக்கேற்ற நன்மைகளும் உண்டு.

ஈசனின் தவப்புதல்வன், தமிழின் கடவுளாக விளங்கி மாட்சிமையுடன் அருள் வழங்கும் முருக பெருமானுக்கு தைப்பூசம் நாளிலே விழா எடுக்கப்படுகிறது. முருக பெருமானுக்கு வேண்டுதல் வைக்கும் பலரும் பல வகையான காவடிகளுடன் முருக பெருமானின் திருத்தலத்திற்கு ஆடி வருகின்றனர். முருக பெருமானுக்கு 20 வகை காவடிகள் எடுக்கப்படுகின்றன.
தங்க காவடி நீடித்த புகழையும், வெள்ளிக் காவடி நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. பால்க் காவடி செல்வ செழிப்பையும், சந்தனக்காவடி வியாதிகளை நீக்கியும், பன்னீர்க் காவடி மனநல பாதிப்புகளை நீக்கியும் அருள்கிறது. சர்க்கரைக் காவடி சந்தான பாக்கியம், அன்னக்காவடி வறுமை நீக்கும், இளநீர்க் காவடி சரும வியாதி போக்கும், அலங்காரக் காவடி திருமணத்தடை நீக்கும், அக்கினிக் காவடி பில்லி, சூனியம் செய்வினை அகற்றும்.

சர்ப்பக் காவடி குழந்தை வரன் அளிக்கும். கற்பூரக் காவடி பூரண ஆரோக்கியம் அருளும். தேர்க்காவடி உயிராபத்துகள் நீக்கும் இறையருளுக்கு நன்றி தெரிவிக்க, மச்சக் காவடி நீதி, நேர்மையான தீர்ப்பு கிடைக்க, மஞ்சள் காவடி வாழ்வில் வெற்றிகளை குவிக்க, சேவல் காவடி எதிரிகள் தொல்லை நீங்க, பழக்காவடி செய்யும் தொழிலில் வெற்றியை பெற, மயில் காவடி இல்லத்தில் இன்பம் நீடித்திருக்க, புஷ்ப காவடி எடுப்பது நினைத்ததை நடத்தி முடிக்கும். வேல் காவடி எதிரிகளை நடுநடுங்க வைக்கும் வேலனின் பூரண அருளும், வீரமும் கிடைக்க செய்யும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *