ப்ளூ ஸ்டார் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?
அறிமுக இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு ஆகியோர் பிராதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கீர்த்தி பாண்டியன், பிருத்விராஜன், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், லிசி அந்தோணி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்யும் ப்ளூ ஸ்டார் படத்திற்கு செல்வா ஆர்.கே. படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் கடந்த 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
விளையாட்டில் இருக்கும் அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ரஞ்சித் என்ற கேரக்டரில் அசோக் செல்வனும், ராஜேஷ் என்ற கேரக்டரில் சாந்தனுவும் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படம் ரூ. 80 லட்சம் வசூலை முதல் நாள் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால் கண்டிப்பாக இனிவரும் நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.