பேடிஎம் பாஸ்டேக் கணக்கை DEACTIVATE அல்லது PORT செய்வது எப்படி? – எளிய வழிமுறை
இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் செயல்பாட்டுக்கு முழுமையான தடை விதித்தது. இதனால் பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் மற்றும் பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக் போன்றவற்றை பயன்படுத்துவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு அவற்றை பயன்படுத்த முடியாது என்பதால் பேடிஎம் வாடிக்கையாளர்கள் வேறு செயலிகளை நாட தொடங்கியுள்ளனர். நீங்கள் பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு தான் இந்த கட்டுரை.
பேடிஎம் பாஸ்டேக் கணக்கை டீ ஆக்டிவேட் செய்வது எப்படி? மற்றும் வேறு ஒரு கணக்கிற்கு மாற்றுவது எப்படி? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் அவர்களின் பாஸ்டேக் கணக்கில் உள்ள பணம் காலியாகும் வரை அதனை பயன்படுத்தி கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
பேடிஎம் பாஸ்டேக்கை DEACTIVATE செய்வது எப்படி?
படி 1: பேடிஎம் போர்ட்டலுக்கு சென்று FASTagஇல் லாகின் செய்யுங்கள். இதற்கு user ID, wallet ID மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்ய வேண்டும்
படி 2: தொடர்ந்து FASTag எண், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் பிற தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். சரிபார்ப்புக்காக இந்த தகவல்கள் கேட்கப்படும்
படி 3: பின்னர் Help & Support என்பதை கிளிக் செய்ய வேண்டும்
படி 4: அதில் காட்டப்படும் விருப்பங்களில் ‘Need Help With Non-Order Related Queries?’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்
படி 5: அதில் தோன்றக்கூடிய விருப்பங்களில் Updating FASTag Profile என்பதை தேர்வு செய்ய வேண்டும்
படி 6: அதில் I Want to Close My FASTag என்பதை கிளிக் செய்தால் படிப்படியான வழிமுறைகள் காண்பிக்கப்படும். அதனை பின்பற்ற வேண்டும்.
ஒரு முறை உங்களது பேடிஎம் பாஸ்டேக் கணக்கை டீஆக்டிவேட் செய்துவிட்டால் மீண்டும் அந்த கணக்கை ஆக்டிவேட் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த நடைமுறையை தொடங்கும் முன்னர் , அதில் உள்ள பேலன்ஸை காலி செய்துவிடுங்கள்.
பேடிஎம் பாஸ்டேக் கணக்கை வேறு கணக்கிற்கு மாற்றலாமா அதாவது போர்ட் செய்யலாமா..?
பேடிஎம் செயலி வாயிலாக பாஸ்டேக்கை பயன்படுத்துபவர்கள் அந்த கணக்கை வேறு கணக்கிற்கு அல்லது போர்ட்டலுக்கு போர்ட் செய்ய முடியும்.
படி 1: நீங்கள் எந்த வங்கியின் கணக்கிற்கு உங்கள் பாஸ்டேக் கணக்கை மாற்ற விரும்புகிறீர்களோ அந்த வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
படி 2: பேடிஎம்மில் இருந்து பாஸ்டேக் கணக்கை மாற்ற வேண்டும் என்ற உங்கள் கோரிக்கையை முன் வைக்க வேண்டும்
படி 3: இதற்காக அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கினால் போதுமானது உங்களது கணக்கு மாற்றப்படும்.
இனி புதிதாக மாற்றப்பட்ட வங்கி கணக்கில் இருந்து நீங்கள் எளிதாக பாஸ்டேக்கை பயன்படுத்தி கொள்ளலாம்.