பெண்களுக்காக வீட்டிலேயே எப்படி மெனிகியூர் (Manicure) செய்யலாம்?
சருமத்தை அழகுப்படுத்தவது என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். இன்றைய காலகட்டத்தில் சரும பராமரிப்பு என்பது குறைந்து கொண்டு செல்வதால் இரசாயன பயன்பாடு அதிகமாக காணப்படுகிறது.
தூசி, அழுக்கு மற்றும் மண் துகள்கள் உங்கள் தோலின் துளைகளில் குவிந்து, உங்கள் சருமத்தை உயிரற்றதாக ஆக்குகிறது.
பெண்கள் தங்கள் சருமத்தை பளபளக்க பல வகையான அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் வீட்டிலேயே எப்படி மெனிக்யூர் செய்யலாம் என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பாக்கலாம்.
மெனிக்யூர்
மெனிக்யூர் என்பது அழகுபடுத்துவது மட்டுமல்ல நமது கைகளையும், கைவிரல்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக விரல்களில் இருக்கும் நகங்களைச் சுத்தப்படுத்தி நகங்களைச் சுற்றியுள்ள இறந்த செல்களை நீக்கி, விரல்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் ஒரு முறையாகும்.
இதை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டும் செய்யலாம்.
ஒரு கையளவு பன்னீர் ரோஜா இதழ்களை சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
பின்பு அதில் ஒரு ஸ்பூன் கடலை மாவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இந்த கலவையை இரண்டு கைகளிலும் தடவிக்கொண்டு 10 நிமிடங்கள் அப்படியே விடவும்.
10 நிமிடத்திற்கு பிறகு கழுவி விட்டால் கை மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்கும்.