எளிய செய்முறையில் கிரீமியான ‘பால் கொழுக்கட்டை’ எப்படி செய்யலாம்.?
தமிழகத்தின் பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகைகளில் ஒன்று ‘பால் கொழுக்கட்டை’. இது பாரம்பரிய செட்டி நாட்டு உணவு வகைகளில் ஒன்று ஆகும். பால் கொழுக்கட்டையை தேங்காய் பால், பசும் பால், மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யலாம்.
பால் மற்றும் அரிசி மாவு வைத்து தயாரிக்கப்படும் இது அதன் கிரீமி சுவைக்காக அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது.
இந்த பால் கொழுக்கட்டையானது பொதுவாக விநாயக சதுர்த்தி அல்லது கிருஷ்ண ஜென்மாஷ்டமி போன்ற விசேஷ நாட்களில் பிரசாதமாக பரிமாறப்படும். அதேபோல் பெரும்பாலா தென்னிந்திய வீடுகளிலும் இது அடிக்கடி செய்யப்படுகிறது.
இன்று நாம் இங்கே பார்க்க போகும் ரெசிபியானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கிரீமி பால் கொழுக்கட்டையை எளிய மற்றும் வித்தியாசமான முறையில் எப்படி சுவையாக செய்யலாம் என்று தான்.
தேவையான பொருட்கள் :
அரிசி மாவு – 2 கப்
பால் – 1.5 லிட்டர்
வெல்லம் – 1/2 கப்
சர்க்கரை – 1/2 கப்
துருவிய தேங்காய் – 1/2 கப்
நெய் – 1 டீஸ்பூன்
ஏலக்காய் தூள் – 2 டீஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு பின்ச்
உப்பு – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 2 1/2 கப்
செய்முறை :
முதலில் கொழுக்கட்டைக்கு மாவு தயாரிக்க அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டரை காப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து சூடாக்கவும்.
தண்ணீர் சூடானதும் அதில் 1 டீஸ்பூன் உப்பு மற்றும் நெய் சேர்த்து அதிகமான தீயில் சூடாக்கவும்.
தண்ணீர் கொத்தி வந்தவுடன் இரண்டு கப் அரிசி மாவை அதனுடன் சேர்த்து கொள்ளவும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசி மாவை நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
ஓரளவிற்கு அரிசி மாவை மிக்ஸ் செய்தவுடன் அடுப்பை அணைத்து மீண்டும் அதை நன்றாக கலந்து மூடி போட்டு ஆறவிடவும்.
அரிசி மாவு முழுமையாக ஆறியவுடன் கைகளை கொண்டு நன்றாக பிசைந்து மாவை மென்மையாக்கி கொள்ளவும்.
பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி அதன் மேல் அரிசி மாவு தூவி நன்றாக உருட்டி கொள்ளவும்.
தற்போது சுத்தமான ஒரு கத்தரிகோலை எடுத்து அதன் மேல் அரிசி மாவை தடவி உருட்டி வைத்துள்ள மாவை குட்டி குட்டிகளாக நறுக்கி எடுத்துகொள்ளுங்கள்.
அடுத்து நாம் கட்செய்து வைத்துள்ள மாவு துண்டுகளை எடுத்து கைகளால் திரட்டி கொள்ளவும்.
பின்பு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து அதில் ஒன்றரை லிட்டர் அளவிற்கு கெட்டியான பால் சேர்த்து சூடாக்கவும்.
பால் நன்றாக பொங்கி வந்தவுடன் நாம் திரட்டி வைத்துள்ள மாவு கொழுக்கட்டைகளை சேர்த்து மெதுவாக கலந்துவிட்டு குறைந்த தீயில் 10 நிமிடங்களுக்கு வேகவிடவும்.
பிறகு அரை கப் வெல்லம் மற்றும் அரை கப் சர்க்கரை சேர்த்து கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.
சர்க்கரை மற்றும் வெல்லம் முழுமையாக கரையும் வரை மாவு அடியில் ஒட்டாமல் இருக்க இடை இடையே பொறுமையாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.
பால் நன்றாக திக்கான பதத்திற்கு வரும்வரை அடுப்பை குறைந்த தீயில் வைத்து சமைக்கவும்.
பிறகு அதனுடன் ஏலக்காய் போடி மற்றும் ஒரு பின்ச் குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
அடுத்து அதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து கலந்துவிட்டால் சுவையான ‘பால் கொழுக்கட்டை’ ரெடி