குழந்தைகளுக்கு பிடித்த மொறு மொறு ‘தக்காளி தோசை’ எப்படி செய்யலாம்.? இதோ ரெசிபி
பொதுவாக குழந்தைகள் உணவுகள் விதவிதமாக, கலர்கலராக இருந்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குழந்தைகள் தினமும் வெரைட்டி வெரைட்டியான உணவுகளையே சாப்பிட விரும்புவார்கள்.
அப்படி தினமும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி என்ன சமைக்கலாம் என்று மண்டையை பிய்த்துக்கொள்ளும் தாய்மார்களுக்கே இந்த ரெசிபி பதிவு.
தினமும் நார்மல் தோசை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்துபோய் விட்டதா அப்போ கண்டிப்பா இந்த தாக்காளி தோசையை செய்து அசத்துங்க…
தேவையான பொருட்கள் :
- தோசை மாவு
- காய்ந்த மிளகாய் – 2
- தக்காளி – 4
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் காய்ந்த மிளகாய், நறுக்கிய தக்க்காளி, மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு மசிய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து நாம் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை தேவையான அளவு தோசை மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் தோசை கல் வைத்து காய்ந்ததும் எண்ணெய் தடவவும்
தோசை கல் சூடானதும் தேவையான அளவு மாவை கரண்டியில் எடுத்து கல்லில் ஊற்றி தோசை வடிவில் மெல்லிசாக சுட்டு கொள்ளவும்.
தோசை சுட்டவுடன் அதற்கு தேவையான அளவு எண்ணெய் தோசை மேல் சேர்த்து கொள்ளவும்.
ஒரு பக்கம் வெந்தவுடன் தோசையை திருப்பிப்போட்டு மறுபக்கமும் வேகவிடவும்.
குறிப்பு : ஒருவேளை நீங்கள் மூடிப்போட்டு தோசை சூடுபவர்கள் என்றால் திருப்பிப்போட தேவையில்லை.
இருபக்கமும் நன்கு வெந்தவுடன் தோசையை எடுத்து சூடாக குழந்தைகளுக்கு பரிமாறவும்.
இந்த தக்காளி தோசையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.