சுவையான சாஃப்ட் கோதுமை மாவு இட்லியை வீட்டிலேயே செய்வது எப்படி.? உங்களுக்கான ரெசிபி..!

பொதுவாக இட்லி என்பது தென் இந்தியாவின் மிக பிரபலமான அரிசியினால் செய்யப்படும் ஓர் உணவு பதார்த்தம். இது ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படுகிறது.

இந்த இட்லியை கோதுமை மாவில் சாஃப்ட்டாக ஆரோக்கியம் நிறைந்ததாக செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

முழு கோதுமை மாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் நமது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சுவையான சாஃப்ட் கோதுமை மாவு இட்லியை வீட்டிலேயே எவ்வாறு செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம்…

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்

உளுந்து – 1 ஸ்பூன்

கேரட் – 1 (பொடியாக துருவியது)

இஞ்சி – 1/2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

அதிகமாக புளிக்காத தயிர் – 1/4 கப்

சமையல் சோடா – 1/4 ஸ்பூன்

கடுகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1/2 ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்

கொத்தமல்லித் தழை (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவைக்கேற்ப

தண்ணீர்

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் கோதுமை மாவை சேர்த்து அதன் வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.

கோதுமை மாவு நன்றாக வறுபட்டவுடன் ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும்.

பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து, கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் இலை, கறிவேப்பிலை மற்றும் துருவிய கேரட் ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் ஒரு தட்டிற்கு மாற்றி 5 நிமிடங்களுக்கு ஆற வைத்துக்கொள்ளவும்.

அடுத்து முதலில் வறுத்து வைத்துள்ள கோதுமை மாவை இட்லி பதத்திற்கு தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு இட்லி மாவிற்கு தேவையான அளவு உப்பு, அதிகமாக புளிக்காத தயிர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

கடைசியாக கரைத்து வைத்துள்ள மாவில் சமையல் சோடாவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

அதன் பின்னர் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தாளிப்பு கலவையை மாவுடன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்தால் கோதுமை இட்லி மாவு தயார்.

அடுத்து இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து கொதித்ததும் இட்லி தட்டில் இவற்றை எப்போதும் இட்லி சுடுவது போல் தட்டில் மாவு ஊற்றி 7 முதல் 8 நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வேகவைத்து எடுக்கவும்.

அவ்வளவுதான் சுவையான சாஃப்ட் கோதுமை மாவு இட்லி ரெடி…

இவற்றை உங்களுக்கு விருப்பமான சட்டினிகளுடன் சேர்த்து பரிமாறலாம்…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *