உடல் எடையை குறைக்கும் தினை மா குலாப் ஜாமுன் செய்வது எப்படி?
குலாப் ஜாமூன் பல தெற்காசிய நாடுகளில், குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் பிரபலமான இனிப்பு வகையாகும்.
“குலாப் ஜாமூன்” என்ற பெயர் பாரசீக மொழியிலிருந்து இருந்து வரப்பட்டதாகும். “குலாப்” என்றால் ரோஸ்வாட்டர் மற்றும் “ஜாமூன்” என்பது வடிவமாகும்.
குலாப் ஜாமூன் பொதுவாக திருமணங்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் போது பரிமாறப்படுகிறது. இது சூடாகவும் குளிராகவும் சாப்பிட ருசியாக இருக்கும்.
மேலும் இது பெரும்பாலும் பிஸ்தா அல்லது பாதாம் போன்ற நறுக்கப்பட்ட பருப்புகளால் அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
அந்தவகையில் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளையும் தரக்கூடிய தினை மா வைத்து எப்படி சுவையான குலாப் ஜாமூன் செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.
தேவையான பொருட்கள்
தினை மாவு- 100 கிராம்
கேழ்வரகு- 50 கிராம்
உப்பு- தேவையான அளவு
பால் – 1 கப்
நெய் – சிறிதளவு
சர்க்கரை- 150 கிராம்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரையை பாகு காய்ச்சி, ஏலக்காய் தட்டிப் போட்டுக்கொள்ளவும்.
அடுத்து தினை மாவு, கேழ்வரகு மாவுடன் தண்ணீர், உப்பு, பால் மற்றும் நெய் சேர்த்து நன்கு பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
இறுதியாக பொரித்தெடுத்து சர்க்கரை பாகு கரைசலுடன் ஊற வைத்து பரிமாறினால் சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை மா குலாப் ஜாமுன் தயார்.