செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் குழம்பு செய்வது எப்படி.? இந்த ரெசிபி தெரிஞ்சு வச்சுக்கோங்க..!

பொதுவாகவே அசைவ உணவு விரும்புவோரின் பட்டயலில் மட்டம் முக்கிய இடம்பிடித்துவிடும். மட்டன் குழப்பு பிக்காதவர்களும் கூட செட்டிநாடு மட்டன் குழம்பின் மலாலா மணம் மற்றும் சுவைக்கு அடியாமையாகி விடுவார்கள்.

ஆனால் செட்டிநாடு மட்டன் குழம்பு செய்வது பலருக்கும் கடினமான விடயமாகவே இருக்கின்றது. காரணம் அது மிகவும் துல்லியமான செய்முறை மற்றும் பிரத்யேகமான மசாலா தூள் கொண்டது. ஆனால் அதன் சுவைக்கு வேறு எதுவும் ஈடு இணை இல்லை என்றால் மிகையாகாது.

அந்த வகையில் செட்டிநாட்டு பாரம்பரிய முறையில் காரசாரமாக சுவையில் மட்டன் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் – 1/2 கிலோ கிராம்

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 தே.கரண்டி

மஞ்சள் தூள் – 1 தே.கரண்டி

சோம்பு – 1 தே.கரண்டி

கிராம்பு – 3

பட்டை – 1

ஏலக்காய் – 2

எண்ணெய் – 3

டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

தண்ணீர் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் அரைக்க தேவையான பொருட்கள் : துருவிய தேங்காய் – 1 கப் மற்றும் சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செட்டிநாடு மசாலா பொடி அரைக்க தேவையான பொருட்கள் :

வரமிளகாய் – 6

கொத்தமல்லி விதைகள் – 4 தே.கரண்டி

சீரகம் – 1 தே.கரண்டி

சோம்பு – 1 தே.கரண்டி

மிளகு – 1 தே.கரண்டி

பட்டை – 2

ஏலக்காய் – 5

அன்னாசிப்பூ – 1

செய்முறை

முதலாவதாக மட்டனை நன்றாக கழுவ சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் செட்டிநாடு மசாலா பொடியை தாயாரிப்பதற்கு தெவையான வரமிளகாய், கொத்தமல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, பட்டை, ஏலக்காய் மற்றும் அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் வறுத்தெடுத்த மசாலா பொருட்கள் நன்றாக ஆறியதன் பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் போடும் முன்னர் மிக்ஸி ஜார் நன்றா உலர்ந்த நிலையில் இருக்கிறதா என்பதை உருதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் சோம்பு ஆகியவற்றை நேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சின்ன வெங்காயம் பொன்னிறமாகும் அளவுக்கு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

வதங்கியவுடன் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கி கொள்ளவும். அதன் பச்சை வாசனை போனவுடன் சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி மென்மையாக வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள செட்டிநாடு மசாலா பொடியை சேர்த்து நன்கு கலந்துகொள்ள வெண்டும்.

பின்னர் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி குறைவான தீயில் 8 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும்.

குக்கரின் பிரஷர் அடங்கிய பின்னரை் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை கலந்து நன்றாக கிளறிவிட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

மட்டன் குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும் போது இறுதியில் நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் சுவையான செட்டிநாடு மட்டன் குழம்பு தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *