திருநெல்வேலி ஸ்டைலில் ‘சொதிக் குழம்பு’ எப்படி செய்யலாம்.? ரெசிபி இதோ…

‘சொதிக் குழம்பு’ திருநெல்வேலியின் பாரம்பரியமான மிகவும் பிரபலமான உணவாகும். இதை இடியாப்பம், இட்லி, சாதம் என அனைத்திற்கும் தொட்டு சாப்பிட்டால் ருசி அவ்வளவு அருமையாக இருக்கும்.

இந்த சொதிக் குழம்பை திருநெல்வேலி ஸ்டைலில் வீட்டிலேயே எப்படி ஈசியாக செய்யலாம் என்று இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள் :

தேங்காய் பால் – 240ML (முதல் பால்)

தேங்காய் பால் – 3 கப் ( 2, 3வது பால்)

பாசி பருப்பு – 100 கிராம்

உருளைக்கிழங்கு – 2

கேரட் – 1

பீனஸ் – 4

சின்ன வெங்காயம் – 10

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – 2 துண்டு

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன்

செய்முறை :

முதலில் பாசி பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து அதை நன்கு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு உருளைக்கிழங்கு, கேரட், பீனஸ் ஆகியவற்றை பாதியாக வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.

பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ளவும்.

இவை நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு அதே கடாயில் நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்க்கவும்.

அதையடுத்து அவித்த உருளைக்கிழங்கு, பாதி அளவில் வேகவைத்து எடுத்த கேரட், பீன்ஸை சேர்த்துக்கொள்ளவும்.

பின்னர் அதில் அரைத்து எடுத்து வைத்துள்ள 2வது மற்றும் 3வது தேங்காய் பாலை சேர்த்து நன்கு கிளறி அந்த தேங்காய் பாலில் நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

அடுத்து அதில் வேகவைத்த பசி பருப்பை சேர்த்து கிளறி அதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து சமைக்கவும்.

10 நிமிடங்களுக்கு பிறகு எடுத்து வைத்துள்ள முதல் தேங்காய் பாலை சேர்த்து அதிக நேரம் வேக வைக்காமல் ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

அவ்வளவுதான் சுவையான திருநெல்வேலி ஸ்டைலில் ‘சொதிக் குழம்பு’ தயார்…

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *