மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு ஆன்லைனில் SIP அக்கவுண்டை திறப்பது எப்படி?
SIP-களில் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிறிய அளவிலான தொகையை முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்கலாம். நீங்கள் தொடர்ந்து அதிகப்படியாக செலவு செய்தாலோ அல்லது தவறான முதலீட்டை செய்து வந்தாலோ சரியான பாதையில் உங்களை அழைத்து செல்வதற்கு SIPகள் உதவும்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலமாக செய்யப்படும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கடந்த சில வருடங்களாக பிரபலமாக உள்ளது. இரண்டாவதாக மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடு பல்வேறு வகையிலான ஸ்டாக்குகளில் செய்யப்படுவதால் மார்க்கெட் அபாயங்கள் காரணமாக ஒரு சில ஸ்டாக்குகளின் விலை குறைந்தாலும் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுவதில்லை.
ஒருவேளை நீங்கள் SIP-களில் முதலீடு செய்ய ஆசைப்பட்டு ஆன்லைனில் எப்படி அக்கவுண்ட் திறக்க வேண்டும் என்பது தெரியாமல் இருந்தால் அதற்கான படிப்படியான வழிகாட்டுதலை இப்பொழுது பார்க்கலாம்.
டாக்குமென்ட்கள்
முதலில் ஆன்லைன் SIP அக்கவுண்ட் திறப்பதற்கு தேவையான அனைத்து டாக்குமென்ட்களையும் தயார் நிலையில் வையுங்கள். அவற்றில் முகவரி சான்றிதழ், PAN கார்டு மற்றும் அடையாள சான்றிதழ் அடங்கும்.
பிற டாக்குமென்ட்களுடன் சரியான பேங்க் அக்கவுண்ட் நம்பர் மற்றும் விவரங்களை நீங்கள் வழங்க வேண்டும். பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமத்தின் நகல்களை கூட நீங்கள் ID ப்ரூஃப் ஆக பயன்படுத்தலாம். அரசு நிர்ணயித்துள்ள நோ யுவர் கஸ்டமர் விதிகளை நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
KYC
அனைத்து டாக்குமென்ட்களும் தயார் நிலையில் இருக்கும் பொழுது முதலீடு செய்வதற்கு முன்பாக நீங்கள் உங்களது KYC (know your customer) கோரிக்கையை பூர்த்தி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் வங்கி அல்லது ஒரு போஸ்ட் ஆபீசில் விண்ணப்ப படிவம் ஒன்றை நிரப்ப வேண்டும். இதனை நீங்கள் ஆன்லைனிலும் செய்யலாம்.
SIP சைன் இன்
KYC செய்து முடித்த பிறகு ஒரு இந்திய புரோக்கர் அல்லது ஒரு ஃபைனான்சியல் ஆலோசகருடன் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்த பிறகு நீங்கள் முதலீடு செய்ய நினைக்கும் SIP திட்டத்தை தேர்வு செய்யவும்.
தேதியை தேர்வு செய்யுங்கள்
உங்கள் சௌகரியத்திற்கு ஏற்றார் போல ஒரு தேதியை தேர்வு செய்யவும். பல்வேறு SIP-களுக்கு ஒரே மாதத்தில் நீங்கள் எந்த ஒரு தேதியை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம்.
உங்களது படிவத்தை சமர்ப்பிக்கவும்
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை நீங்கள் முடிவு செய்த பிறகு, உங்களது ஃபண்ட் ஹவுஸை பொறுத்து பேப்பர் ஒர்க்கை ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் முடித்த பிறகு நீங்கள் உங்களது SIP-யை துவங்கலாம். உங்களிடம் ஏற்கனவே டீமேட் அக்கவுண்ட் இருந்தால் உங்களது SIP-யை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். அதனை நீங்கள் போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கி மூலமாகவும் அனுப்பலாம்.
SIP -யில் முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
எந்த ஒரு வகையிலான SIP-களில் நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு வரக்கூடிய அபாயங்களை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு நிபுணரிடமிருந்து பொருளாதார ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் முதலீடு செய்ய போகும் தொகையை முடிவு செய்யுங்கள் மற்றும் நீங்கள் பெறப்போகும் ரிட்டன்கள் எவ்வளவாக இருக்கும் என்ற ஒரு கணக்கு போட்டு வைத்துக் கொள்ளவும்.