சூப்பர் சுவையில் முட்டை சுக்கா தயார் செய்வது எப்படி?
பொதுவாக முட்டையில் ஆம்லெட், பொரியல், குழம்பு, வறுவல் இது மாதிரி செய்தா எல்லாருமே அதிகமாக சாப்பிடுவாங்க.
அதுலயும் இந்த மாதிரி சுக்கா எல்லாம் செய்து தந்தால் ரொம்பவே பிடிக்கும். இந்த முட்டை சுக்கா எல்லா சாதத்துக்குமே ரொம்ப டேஸ்டா இருக்கும். இந்த சுவையான முட்டை சுக்கா எப்படி செய்வது தெரிஞ்சுக்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்:
முட்டை- 5
சோம்பு- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன் தூள்
துருவிய தேங்காய்- 2 ஸ்பூன்
சின்ன வெங்காயம்- 6
தக்காளி- 1
கிராம்பு- 2
பட்டை – 1 துண்டு
தனியா விதைகள்- 1 ஸ்பூன்
மிளகு- 3 ஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
கொத்தமல்லி- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை: முட்டையை வேக வைத்து ஓட்டை உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மஞ்சள் கருவை உடையாமல் முட்டையை வெள்ளை கருவை தனியாக எடுத்து சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அதன்பிறகு ஒருமிக்சி ஜாரில் பட்டை, சோம்பு, தனியா விதைகள், மிளகு சேர்த்து அரைக்க வேண்டும். அதில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் வாணலியில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நீரை ஊற்றி கிளறி விட வேண்டும். மசாலா நன்றாக சுண்டி வந்த பிறகு அதில் நறுக்கிய முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
இறுதியாக எடுத்து வைத்த மஞ்சள் கருவை சேர்த்து உடைக்காமல் மசாலாவில் கலந்து விட்டு கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் ருசியான முட்டை சுக்கா வறுவல் தயார்.