மோசடி போன் கால்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி ?
உங்களுடைய தனி நபர் அல்லது பொருளாதாரம் சம்பந்தப்பட்ட தகவல்களை கேட்கக்கூடிய வழக்கத்திற்கு மாறான கோரிக்கைகள் அடங்கிய வாட்ஸ்அப் கால்களை கையாளும் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வாட்ஸ்அப்பில் தெரியாத ஒரு நபரிடம் இருந்து உங்களுக்கு போன் கால் வந்தால் அதனை நீங்கள் எச்சரிக்கையாக கையாள வேண்டும். அடையாளத்தை மறைப்பதற்காக மோசடிக்காரர்கள் தெரியாத நம்பர்களை பெரும்பாலும் பயன்படுத்துவார்கள்.
உதாரணமாக உங்களுக்கு ஒரு பரிசு விழுந்திருக்கிறது என்றோ அல்லது உங்களுடைய அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது என்றோ உங்களிடம் சொல்லலாம்.
உங்களுக்கு வரக்கூடிய வாட்ஸ்அப் காலின் ஆடியோ தரத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். மோசடி கால்கள் பெரும்பாலும் மோசமான தரமற்ற ஆடியோ கொண்டிருக்கலாம்.
மோசடிக்காரர்கள் பொதுவாக வங்கிகள் அல்லது அரசு ஏஜென்சிகளில் வேலை செய்பவர்களைப் போல தங்களை காட்டிக் கொள்வார்கள்.
மேலும், பெரும்பாலான மோசடிக்காரர்கள் உங்களுடைய தனி நபர் விவரங்கள் அல்லது பேமெண்ட்டுகளை உங்களை செலுத்த வைப்பதற்கு இதுபோன்ற யுக்திகளை கையாளுகிறார்கள்.
வாட்ஸ்அப்பில் உங்களுக்கு ஒரு மோசடி கால் பெறப்பட்டதாக நீங்கள் சந்தேகத்தால் உடனடியாக அது குறித்து வாட்ஸ்அப்பில் புகார் அளியுங்கள்.