மின் கட்டணத்தை பாதியாக குறைப்பது எப்படி?
தமிழக வீடுகளில் தற்போது ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில் துல்லியமாக மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், தற்போது வெயில் காலம் துவங்கி விட்ட நிலையில் அனைவரின் வீட்டிலும் மின் தேவை அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், கரண்ட் பில்லை பாதியாக குறைப்பது தொடர்பான வழிகளை தற்போது காணலாம்.
அதாவது, அதிக வாட்ஸ் கொண்ட எல்இடி பல்புகளை பயன்படுத்துவதற்கு பதிலாக 15 வாட்ஸ் வரையில் இருக்கும் எல்இடி பல்புகளை பயன்படுத்துவதால் மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்.
வீட்டில் டியூப் லைட்டிற்கு பதிலாக எல்இடி பல்புகளை பயன்படுத்துங்கள். 2 வாட்ஸ் முதல் 40 வாட்ஸ் வரை திறன் கொண்ட எல்இடி பல்புகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை பொறுத்துவதன் மூலம் உங்களால் வீட்டின் மின்சார கட்டணத்தை பெருமளவு குறைக்க முடியும்.
உங்கள் வீட்டில் பழைய மின்விசிரி இருந்தால் அவற்றை உடனடியாக மாற்றி விடுங்கள். ஏனெனில் இந்த மின்விசிரிகள் 100 முதல் 140 வாட்ஸ் திறன் கொண்டவை. ஆனால் தற்போது புதிய தொழில்நுட்பமான BLDS மின்விசிரிகள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுளன. அவை 40 வாட்ஸ் வரை திறன் கொண்டவை. இவை மின்சார பயன்பாட்டை குறைப்பதால் உங்கள் வீட்டின் மின்சார கட்டணமும் குறையும்.
இன்வெர்ட்டர் ஏசியைப் பயன்படுத்துங்கள். உங்கள் வீட்டில் வழக்கமான விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசி இருந்தால், உடனடியாக அதை அகற்றிவிட்டு இன்வெர்ட்டர் ஏசியை பொருத்துங்கள். இதன் மூலம் உங்கள் வீட்டின் மின்சார கட்டணம் குறையும்.
சோலார் பேனல்களை நிறுவவும்
சோலார் பேனல் விருப்பம் இந்தியாவில் சிறந்தது. உங்கள் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை நிறுவலாம். இது ஒரு முறை முதலீடு ஆகும், மேலும் அது உங்கள் மின்சார கட்டணத்தை குறைக்க உதவும்.
குளிர்சாதன பெட்டியில் இதை செய்யாதீர்கள்
மைக்ரோவேவ் போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. இதனால் மின் நுகர்வு அதிகமாகும். குளிர்சாதன பெட்டியை நேரடி சூரிய ஒளியில் இருந்து விலக்கி வைக்கவும். குளிர்சாதன பெட்டியைச் சுற்றி காற்றோட்டத்திற்கு போதுமான இடத்தை அனுமதிக்கவும். சூடான உணவை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம்.
நீங்கள் ஏர் கண்டிஷனை இயக்க வேண்டும் என்றால், அதை 25 டிகிரியில் இயக்கவும். இது மின் நுகர்வை குறைக்கும். மேலும், ஏசி இயங்கும் அறையின் கதவை எப்போதும் மூடியே வைக்கவும்.