Paytmல் இருந்து உங்களுடைய FASTag ஐ டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி???

2016 ஆம் ஆண்டு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற செய்தி வெளியானதிலிருந்து Paytm நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட எல்லாவற்றிற்கும், சிறிய மற்றும் பெரிய பேமெண்ட்கள் முதல் FASTag வரை அனைத்திற்கும் நாம் பேடிஎம் பயன்படுத்தி வருகிறோம். பெரும்பாலான வாகனங்களில் பேடிஎம் வழங்கிய FASTag உண்டு. இது அவர்களது பேடிஎம் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆனால் சமீபத்தில் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு (PPBL) எதிராக ஒழுங்குமுறை நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் காரணமாக, FASTag உட்பட அனைத்து Paytm சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே Paytm FASTag வைத்திருக்கக்கூடிய நபர்கள் என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

FASTag ஐ வேறொன்றுக்கு மாற்ற முடியுமா அல்லது அதனை டீ-ஆக்டிவேட் செய்ய வேண்டுமா? இதைத் தவிர மற்றொரு முக்கியமான கேள்வி என்னவென்றால் வேறொரு FASTag-க்கு மாறுவது எப்படி?

ஜனவரி 31ம் தேதி அன்று ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா PPBL பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பிறகு டெபாசிட்கள் அல்லது டாப்-அப் கஸ்டமர் அக்கவுண்டுகளை ஏற்பது, வாலட்டுகள், FASTag மற்றும் பிற ப்ராடக்டுகள் போன்ற சேவைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. பேலன்ஸ் உள்ளவரை கஸ்டமர்கள் தங்களது சேவிங்ஸ் பேங்க் அக்கவுண்ட், கரண்ட் அக்கவுண்ட், ப்ரீபெய்டு ப்ராடக்டுகள், FASTag மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உட்பட அனைத்தையும் பிற அக்கவுண்டுகளில் இருந்து பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Paytm FASTag ஐ டீ-ஆக்டிவேட் செய்வது எப்படி?

FASTag Paytm போர்ட்டலுக்குள் லாகின் செய்யுங்கள். இதற்கு நீங்கள் உங்களுடைய யூசர் ஐடி, வாலட் ஐடி மற்றும் பாஸ்வேர்டை என்டர் செய்ய வேண்டும்.

இப்பொழுது FASTag நம்பர், பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் பிற தேவையான விவரங்கள் அனைத்தையும் வெரிஃபிகேஷன் காரணித்திற்காக என்டர் செய்யுங்கள்.

இப்பொழுது டிஸ்ப்ளே செய்யும் பக்கத்தை ஸ்க்ரோல் செய்து ஹெல்ப் & சப்போர்ட் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

அதில் ‘Need Help With Non-Order Related Queries?’ என்ற ஆப்ஷனை தட்டுங்கள்.

இதன் பிறகு Queries Related to Updating FASTag Profile என்ற ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இங்கு I Want to Close My FASTag என்பதை கிளிக் செய்து, மேற்படி கொடுக்கப்பட்டுள்ள படிகளை பின்பற்ற வேண்டும்.

Paytmல் இருந்து உங்களுடைய FASTag ஐ மற்றொன்றுக்கு மாற்றுவது எப்படி?

1. FASTag ஐ Paytmல் இருந்து டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு நீங்கள் எந்த வங்கிக்கு உங்களுடைய FASTag-ஐ டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வங்கியின் கஸ்டமர் கேரை அழைக்க வேண்டும்.
2. நீங்கள் FASTag ஐ டிரான்ஸ்ஃபர் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை அவர்களிடம் தெரிவியுங்கள்.
3. தேவையான விபரங்களை நீங்கள் பகிர்ந்த உடன் டிரான்ஸ்ஃபர் செயல்முறை நிறைவு செய்யப்படும்.
4. Paytm வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, RBI இன் இந்த நடவடிக்கை யூசர்களின் சேவிங்ஸ் அக்கவுண்ட், வாலட், FASTag மற்றும் NCMC அக்கவுண்டுகளை பாதிக்காது என்று கூறியுள்ளது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *