கைநிறைய சம்பளம்… இந்த தீவில் தங்குமிடம், உணவு இலவசம்… அரசு சொல்லும் ஒரே கண்டிஷன்!

அழகான இடத்துக்குச் சென்றால், அங்கேயே தங்கிவிட்டால்தான் என்ன என்று பொதுவாக எல்லோரும் நினைப்போம். இருப்பினும், அத்தகைய இடங்களில் குடியேறுவதற்கான செலவுகள் அதிகமாக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சிறந்த இடத்தில் வசிப்பதற்காக யாராவது உங்களுக்கு பணம் கொடுத்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்! அயர்லாந்தின் மிக அழகிய கிரேட் பிளாஸ்கெட் தீவு இதே போன்ற ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது ஒரு தனி நபருக்கு மட்டுமல்ல, ஜோடிகளுக்கும் பணம் கொடுத்து வாழ வாய்ப்பளிக்கிறது.

நியூயார்க் போஸ்ட் அறிக்கையின்படி, அயர்லாந்தின் கிரேட் பிளாஸ்கெட் தீவில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வளவு அழகான இடத்தில் தங்கும் வசதியும் உணவும் இலவசம் என்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது? இன்னும் சொல்லப் போனால் அங்கே பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டால், ஒருவர் திரும்பும் கேள்வியே இருக்காது. கிரேட் பிளாஸ்கெட் இதையெல்லாம் வழங்குவதாக தெரிகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்குப் பஞ்சம் இல்லை என்றாலும், மக்களை இலவசமாக அழைப்பதற்கு என்ன காரணம்?

இங்கு வருபவர்களுக்கு பஞ்சமில்லை என்று முன்பே கூறியது போல், இங்கு வேலைக்காக தம்பதிகள் அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் இந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வழிகாட்டியாக பணி செய்வதில் ஈடுபடுவார்கள். இத்தீவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறப்பட்டிருக்கும் தகவலின்படி, வழிகாட்டியாக வருபவர்களின் தேவைகள் கவனிக்கப்படும் என்றும், இந்த வேலைக்கு உரிய சம்பளம் வழங்கப்படும் என்றும், அடுக்குமாடி குடியிருப்பில் அவர்களுக்கு தங்குமிடம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி இந்தாண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தொடரும், ஏனெனில் சுற்றுலாவைப் பொறுத்தவரை இந்த பருவம்தான் அந்த தீவின் உச்ச பருவமாகும். விருந்தோம்பலில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அவர்கள் ஆங்கிலத்திலும் பேசத் தெரிந்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரே பிரச்னை என்னவென்றால், இந்த பணிக்கு வருபவர்களுக்கு ஒரு விடுப்பு கூட கொடுக்கப்பட மாட்டாது என்றும் விண்ணப்பிப்பவர்களின் வயது 40 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, Fairfax மற்றும் Kensington என்ற ஆட்சேர்ப்பு நிறுவனம் பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் தொடர்பாக இதேபோன்ற பட்டியலை உருவாக்கியது. அதாவது, அங்கே ஒரு கோடீஸ்வரர் ஒரு தனியார் தீவில் தம்பதிகளுக்கு முழுநேர பணிகளை வழங்கிக் கொண்டிருந்தார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *